உ.பி.யில் 2 சரக்கு ரயில்கள் மோதல்

Image Unavailable

 

லக்னோ, நவ.- 21 - உத்தரபிரதேச மாநிலத்தில் நேற்று கடும் பனி நிலவியது. இதனால் ரயில்போக்குவரத்து, சாலை போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்தும் கடந்த 2 நாட்களாக கடுமையாக பாதிக்கப்பட்டது.  பனிமூட்டம் காரணமாக நாகர் மாவட்டத்தில் தத்ரி ரயில்நிலையம் அருகே 2 சரக்கு ரயில்கள் மோதிக்கொண்டன. இருப்பினும் இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. நான்கு சரக்கு பெட்டிகள் மட்டும் தடம் புரண்டன. இந்த விபத்தால் அந்த பகுதியில் ரயில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. கடும் பனிமூட்டம் காரணமாக காசிபாத், ஆக்ரா, மதுரை போன்ற பல இடங்களிலும் பல்வேறு விபத்துக்களும் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பனி மூட்டத்தால் உ.பி.யில் அனைத்து ரயில்களும் தாமதமாகவே புறப்பட்டு சென்றன. தாமதமாகவே வந்து சேர்ந்தன. லக்னோ உள்ளிட்ட இடங்களில் பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ