முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக்பால் வரம்புக்குள் சி.பி.ஐ. வந்தால் சிதம்பரம் சிறைக்கு போகவேண்டும்-ஹசாரே

புதன்கிழமை, 21 டிசம்பர் 2011      ஊழல்
Image Unavailable

 

ராலேகான், டிச. - 22 - சி.பி.ஐ. மட்டும் லோக்பால் வரம்பிற்குள் வந்தால் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் சிறைக்கு செல்ல வேண்டும் என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். இது குறித்து அன்னா ஹசாரே ராலேகான் சித்தியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  சி.பி.ஐ. லோக்பால் வரம்புக்குள் இல்லை என்றால் அப்புறம் லோக்பால் மசோதா எப்படி வலுவானதாக இருக்க முடியும். இதன் மூலம் ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை காப்பாற்ற முடியும். சி.பி.ஐ. மட்டும் லோக்பால் வரம்புக்குள் வந்து விட்டால் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் சிறைக்குத்தான் போக வேண்டியதிருக்கும். ஊழல் அரசியல்வாதிகளை காப்பாற்றிக் கொண்டு வலுவான லோக்பால் என்று கூறுகிறார்கள்.  மத்திய அரசு மக்களை ஏமாற்றுகிறது. அதற்கு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும். விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கும் 3 மாநிலங்களுக்கும் சென்று அங்குள்ள மக்களிடம் அரசின் தவறுகளை எடுத்து கூறுவேன். பொது தேர்தலுக்கு முன்பு நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து மக்களுக்கு அரசை பற்றி கூறுவேன். நான் அறிவித்தது போன்று வரும் 27 ம் தேதி முதல் 3 நாட்களுக்கு உண்ணாவிரதம் இருப்பேன். அதன் பிறகு சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவேன் என்றார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony