முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுகுமார் நம்பியார் மரணம் பொன். ராதாகிருஷ்ணன் இரங்கல்

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.- 9 - சுகுமாரன் நம்பியார் மறைவுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-​  பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அகில இந்திய முன்னாள் பொருளாளாரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான எம்.என்.சுகுமாரன் நம்பியார் இன்று (நேற்று) காலை மாரடைப்பால் காலமானார். அவருடைய மறைவுக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். மிகப் பெரிய செல்வாக்கு மிக்க குடும்பத்தை சார்ந்தவராக இருந்தாலும் சாதாரண தொண்டர்களோடு நெருக்கமாக பழகுபவரும், நாட்டின் மீதும், தர்மத்தின் மீதும் மிகுந்த பற்று கொண்டவரும், ஏழை எளியவர் வாழ்வில் முன்னேற்றம் காண வேண்டும் என்கின்ற வேட்கை கொண்டவருமான  சுகுமாரன் நம்பியாரின் இழப்பு பாரதிய ஜனதா கட்சிக்கு மட்டுமில்லாமல் நாட்டை நேசிக்கும் தேச பக்தர்கள் அனைவருக்கும் மாபெரும் இழப்பாகும். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும் அவரை குருசாமியாக வணங்கும் லட்சக்கணக்கான ஐய்யப்ப பக்தர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு அவரது ஆன்மா நற்கதியடையவும் எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்.

நாளை (இன்று) 09.01.2012 திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு சென்னை கோபாலபுரத்தில் உள்ள அன்னாரது இல்லத்தில் இறுதி மரியதைக்குப்பின் இறுதிச்சடங்கு 10.00 மணிக்கு பெசன்ட் நகர் மின் மயானத்தில் நடைபெறும். இறுதிச்சடங்கில் பா.ஜ.க தேசிய தலைவர் நிதின்கட்காரி, மூத்த தலைவர் வெங்கையா நாயுடு, அகில பாரத இணை அமைப்புச் செயலாளர் சதிஷ், தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், மாநில தலைவர் பொன்.இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொள்வர். மறைந்த தலைவருக்காக தமிழகம் முழுவதும் 3 நாட்கள் பா.ஜ.கவினர் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடவும் துக்கம் அனுஷ்டிக்கவும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு பொன். இராதாகிருஷ்ணன் தனது செய்திக் குறிப்பில் கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!