முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் மாணவர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்

செவ்வாய்க்கிழமை, 10 ஜனவரி 2012      உலகம்
Image Unavailable

 

மெல்போர்ன், ஜன.10 - ஆஸ்திரேலியாவுக்கு படிக்க சென்ற பாகிஸ்தான் மாணவர் ஒருவர் பாதுகாப்பு காரணம் கருதி அந்நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டு பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் உள்ள தொழில்நுட்ப கல்லூரி ஒன்றில் பாகிஸ்தானை சேர்ந்த சல்மான் கும்மான் என்ற 23 வயது மாணவர் கணக்கியல் பாடம் படிக்க சென்றார். அவரை ஆஸ்திரேலிய பாதுகாப்பு துறை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். 

சல்மானின் போனில் பாகிஸ்தானில் உள்ள பல போன்களுடன் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த மாணவர் எதற்காக ஆஸ்திரேலியாவுக்கு வந்தார் என்பது குறித்து ஆஸ்திரேலிய குடியுரிமை அதிகாரிகளும் விசாரணை நடத்தினர்.

சல்மானின் தந்தை மன்சூர் உசேன் பாகிஸ்தான் விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.  இவரது குடும்பம் தடை செய்யப்பட்ட தீவிரவாத குழுக்களுக்கு நிதி உதவி அளித்து வந்திருப்பது  கண்டுபிடிக்கப்பட்டது.

இதை அடுத்து ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு  காரணங்கள் கருதி பாகிஸ்தான் மாணவர் சல்மானை நாடு கடத்த ஆஸி.அதிகாரிகள் முடிவு செய்தனர். 

அதன்படி சல்மான் நாடு கடத்தப்பட்டார். 

இந்த தகவலை ஆஸ்திரேலிய குடியுரிமை அதிகாரிகள் தெரிவித்ததாக ஆஸ்திரேலிய செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஒரு மாதமாக அன்வரை பிடித்து வைத்திருந்த ஆஸி. அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்பு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் சல்மான் தற்போது தனது நாட்டிற்கு சென்று கொண்டிருப்பதாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்