முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 பேரைக் கொன்றவருக்கு மரண தண்டனை விதிப்பு

புதன்கிழமை, 11 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

 

பதேபூர், ஜன.11 - உத்தரபிரதேச மாநிலத்தில் 5 பேரை கொலை செய்தவருக்கு மரண தண்னை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. கடந்த 2001 ஆம் ஆண்டு ஜூன் 17 ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் பதேபூரில் 5 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் பதேபூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை தொடர்பாக தேவிதீன் சிங், சிவ்ராம்சிங், ஹாரிமேன் உள்ளிட்ட 4  பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது பதேபூர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சுமார் 10 ஆண்டுகாலமாக நடந்துவந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இந்த தீர்ப்பை வழங்கிய பதேபூர் நகர தனி கோர்ட்டு நீதிபதி பி.கே.சதுர்வேதி, 5 பேரை கொலை செய்த குற்றத்திற்காக தேவிதீன் சிங்கிற்கு மரண தண்டனையும், சிவராம்சிங் மற்றும் ஹாரிமேன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். 

ஹஸ்னாபூர் என்ற கிராமத்தில் சிறு தகராறு காரணமாக ஏற்பட்ட சண்டையைத் தொடர்ந்து இந்த படுகொலைச் சம்பவம் நிகழ்த்தப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 4 வது நபர் ராம்காந்த் பஜ்பாய் குற்றமற்றவர் எனக் கூறியும், அவரது குற்றத்திற்கு எதிராக சாட்சியங்கள் இல்லாததாலும் அவரை இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்வதாக நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார். ஒரு சாதாரண விசயத்திற்காக சண்டை போட்டதால் 5 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இவர்கள் 5 பேரையும் படுகொலை செய்த குற்றத்திற்காக தேவிதீன் சிங்கிற்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்