முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கையை வீழ்த்தியது இந்தியா: கோலி பாராட்டு

திங்கட்கிழமை, 3 நவம்பர் 2014      விளையாட்டு
Image Unavailable

 

கட்டக், நவ.04 - இந்தியா - இலங்கைக்கு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று முன் தினம் கட்டக்கில் நடந்தது. இந்த போட்டியில் இலங்கையை எளிதில் வீழ்த்தியது இந்தியா.

முதலில் ஆடிய இந்திய அணியின் துவக்க வீரர்கள் ரகானே, தவான் ஆகியோர் சிறப்பாக ஆடினர். இருவரும் சதம் கடந்தனர். ரகானே 111 ரன்னும், தவான் 113 ரன்னும் விளாசினர். அடுத்து களமிரங்கிய வீரர்களும் சிற்பபாக விளையாடி இந்திய அணியின் ஸ்கோரை மள்ளவென உயர்த்தினர். மொத்தம் 50 ஓவர்கள் முடிவில் இந்தியா 363 ரன்கள் எடுத்தது.

364 ரன்கள் எடுத்தாள் வெற்றி என்ற நோக்கத்துடன் களமிறங்கிய இலங்கை ஆரம்பத்திலிருந்தே சரிவை சந்தித்தது. அந்த அணி 194 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இளந்தது. இதன் மூலம் இந்திய அணி 169 ரன்கள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. பவுலர்கள் இஷாந்த் சர்மா 4 விக்கெட்களை வீழ்த்தினார். ரகானே ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

வெற்றி குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

இந்திய வீரர்களின் வேகப்பந்து வீச்சு பார்ப்பதற்கு சிறப்பானதாக இருந்தது. இது ஆஸ்திரேலியாவில் நிச்சயம் உதவும். வேகப்பந்து வீச்சாளர்கள் சரியான அளவிலும், பீல்டிங்கில் வீரர்களை நிறுத்தியிருந்ததற்கு ஏதுவாகவும் பந்து வீசி அசத்தினர். உலக கோப்பை நெருங்கி வரும் வேளையில் இளம் அணிக்கு தலைமை வகிக்கும் பொறுப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

பவர்பிளேவை முதலிலேயே எடுத்தது நன்கு வேலை செய்தது. துவக்க பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி வந்த வேளையில் பயிற்சியாளர் கூறியபடி பவர்பிளே முன்கூட்டியே எடுக்கப்பட்டது. இது ரன் குவிக்க ஏதுவாக அமைந்தது. ஒட்டு மொத்தமாக பார்க்கையில் எங்களது மிகச்சரியான ஆட்டம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்