எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலூர்,மார்ச்.27 - கள்ளழகர் கோவிலில் வரும் 5 -ம் தேதி திருக்கல்யாண திருவிழா நடக்கிறது. இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தன்று திருவிழா நடைபெறுவது வழக்கமாகும். அதன்படி வரும் 2-ம் தேதி அன்று திருக்கல்யாண திருவிழா அழகர்கோவிலில் தொடங்குகிறது. அன்று சுவாமி புறப்பாடு நடைபெறும். தொடர்ந்து 3,4 தேதிகளிலும் கோவிலிலே திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெறும்.
தொடர்ந்து 5-ம்தேதி காலை 7 .30 மணிக்கு மேல் 8 மணிக்குள் மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் கள்ளழகர் பெருமாள் பல்லக்கில் எழுந்தருளி வந்து கல்யாண மண்டபத்தில் எழுந்தருள்கிறார். தொடர்ந்து திருக்கல்யாண சீர்வரிசைகள் யானை மீது வைத்து எடுத்து வரப்படும். பின்னர் அன்று பகல் 11 மணியில் இருந்து 12 மணிக்குள் கள்ளழகர் பெருமாள், ஒரே நேரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண சுந்தரவல்லித்தாயார், ஆண்டாள் ஆகிய 4 பிராட்டிமார்களையும் மணக்கிறார். திருக்கல்யாண திருக்கோலத்தில் பெருமாள் தேவியர்களுடன் சர்வஅலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். அன்று மாலையில் சுவாமி இருப்பிடம் சேருகிறார். அன்று மதியம் பக்தர்களுக்கு திருக்கல்யாண சாப்பாடு மற்றும் மஞ்சள் கயிறு பிரசாதம் இணைந்த பொட்டங்களும் வழங்கப்படும். மறுநாள் 6 - தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. திருக்கல்யாண ஏற்பாடுகளை கோவில் தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி செல்வராஜ் மற்றும் கோவில்பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |