எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருமங்கலம்-கோவா மாநிலம் பனாஜி நகரில் வேர்ல்டு டிரெடிசனல் சோட்டோகான் கராத்தே சம்ளேனத்தின் சார்பில் நடைபெற்ற 19வது சர்வதேச அளவிலான கராத்தே போட்டிகளில் பங்கேற்ற திருமங்கலம் நகரைச் சேர்ந்த 12வயது மாற்றுத்திறனாளி மாணவர் தர்ஷன் உள்ளிட்ட மாணவ,மாணவியர் 18 பேர் பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை குவித்து புதிய சாதனை படைத்துள்ளனர்.
வேர்ல்டு டிரெடிசனல் சோட்டோகான் கராத்தே சம்மேளனத்தின் சார்பில் கோவா மாநிலத்தின் தலைநகரான பனாஜியில் 19வது சர்வேதச அளவிலான கராத்தே போட்டி கேம்பல் உள் விளையாட்டு அரங்கில் அண்மையில் நடைபெற்றது.இந்த போட்டியில் மலேசியா,தாய்லாந்து,ஜப்பான்,சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.இந்த போட்டிக்கு சர்வதேச தலைமை பயிற்சியாளர் சென்செய்.ரிச்சர்டு ஆமோஸ் நேரடியாக சிறப்பு பயிற்சியளித்து பின்னர் போட்டிகளை துவக்கி வைத்து பார்வையிட்டார்.இந்த போட்டியில் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த 12வயது மாற்றுத் திறனாளி மாணவன் தர்ஷன் உள்ளிட்ட 43 பேர் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிக்காட்டி கடுமையாக போட்டியிட்டனர்.
போட்டியின் முடிவில் ஆலம்பட்டி டெடி பள்ளியில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவன் தர்ஷன்,12 வயதுக்கு உட்பட்டோருக்கான பொதுப்பிரிவு காட்டா போட்டியில் 3ம் இடம் பிடித்து வெங்கல பதக்கம் பெற்று சாதனை படைத்தான்.இதே போல் 7வயது பிரிவில் கவுதம்,11வயது பிரிவில் சங்கீத் கிருஷ்ணா,ஆதிசேஷன்,10வயது பிரிவில் சாய்சரண்,மாதவன்,பிரகதீஸ்வரி,8வயது பிரிவில் சிவகீர்த்தனா,9வயது பிரிவில் பவன்சங்கர்,12வயது பிரிவில் சின்னா,தர்ஷன்,மோஹித்,13வது பிரிவில் சரண்,வைஷாலி,தனுஷ்,14வயது பிரிவில் செல்வன்,15வயது பிரிவில் விஜெயந்த்மாதவன்,ராஜவர்மன் மற்றும் 21 வயது பிரிவில் நான்சி (பிளாக்பெல்ட்) உள்ளிட்டோர் பல்வேறு பிரிவுகளில் பதக்கங்களை குவித்து சாதனை படைத்தனர்.இதை தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவியருக்கு சென்செய்.திருப்பதி,ராமலிங்கம்,பொன்னுச்சாமி,மணிகண்டன் ஆகியோர் பயிற்சியளித்தனர்.
பதக்கங்களை குவித்த திருமங்கலம் பகுதி மாணவ,மாணவியருக்கு இந்திய தலைமை பயிற்சியாளர் சென்செய்.சௌத்ரி,கோவா மாநில பயிற்சியாளர் சென்செய்.ஜோசப்,தமிழக தலைமை பயிற்சியாளர் சென்செய்.பால்பாண்டி ஆகியோர் பதங்களையும்,சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார்கள். இதையடுத்து போட்டிகளில் வெற்றி மாணவ,மாணவியருக்கும்,பயிற்சியாளர் களுக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |