Idhayam Matrimony

கோர்ட்டில் மயங்கி விழுந்த நிர்மலாதேவி

புதன்கிழமை, 9 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

ஸ்ரீவில்லி : கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முற்பட்டதாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு ஆஜராக வந்த நிர்மலாதேவி கோர்ட்டில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முற்பட்டதாக தொடரப்பட்ட  வழக்கில் அந்த கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மற்றும் உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சில மாதங்களுக்கு பின்னர் 3 பேருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது. இவர்கள் வழக்கு தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் ஆஜராகி வருகின்றனர்.

ஒவ்வொரு முறையும் கோர்ட்டில் ஆஜராக வரும் நிர்மலாதேவி தனிமையில் பேசுவதும், வினோதமாக நடந்து கொள்வதும் என பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இதற்காக அவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட்டது. நிர்மலாதேவி உள்பட 3 பேரும் வழக்கு விசாரணைக்காக நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டுக்கு வந்தனர்.

அப்போது கோர்ட்டு வளாகத்தில் அமர்ந்திருந்த நிர்மலாதேவி திடீரென மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் தண்ணீர் தெளித்து அவரை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர். இதைத்தொடர்ந்து நீதிபதி பரிமளா முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளை பதிவு செய்தார். அப்போது நிர்மலாதேவி உள்பட 3 பேரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தனர். அதைத்தொடர்ந்து வழக்கை வருகிற 23-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி அன்றைய நாளில் 3 பேரும் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். முன்னதாக நிர்மலாதேவி உள்பட 3 பேர் மீதும் 8 பிரிவுகளில் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. வழக்கு விசாரணை முடிந்தபின் வெளியே வந்த நிர்மலாதேவி சோர்வுடன் காணப்பட்டார். இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் அவரை அங்கிருந்தவர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து