எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : பருவ மழை தீவிரமடைந்ததையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு குளங்கள், ஏரிகள் நிரம்பியுள்ளன. பாபநாசம், பவானிசாகர் உள்ளிட்ட அணைகளும் நிரம்பியுள்ளன. குற்றாலம் மற்றும் திற்பரப்பு அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. வீராணம் ஏரியும் நிரம்பி விட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை கொட்டித் தீர்த்தது.
தமிழகம் முழுவதும் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இந்த ஆண்டு மாநிலம் முழுவதும் எப்போதும் இல்லாத வகையில் மழை பெய்துள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு முன்னர் புறநகர் பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது. தாம்பரத்தில் அதிகபட்சமாக 14 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. இதன் காரணமாக புறநகர் பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. தென்சென்னை பகுதியில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் பெய்ய தொடங்கிய மழை 3 மணி நேரத்துக்கும் மேலாக கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது. சோழிங்கநல்லூரில் அதிகபட்சமாக 11.2 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. கிண்டியில் 10 சென்டிமீட்டரும், மாம்பலத்தில் 9 சென்டி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. நேற்று காலையிலும் மழை பெய்தது. இதனால் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் நிரம்பி வருகின்றன. தாம்பரம் அருகே உள்ள சேலையூர் ஏரி நிரம்பி வழிகிறது. இதே போல புறநகர் பகுதிகளில் உள்ள நன்மங்கலம், தாங்கல், வேளச்சேரி ஏரிகளும் நிரம்பியுள்ளன. நெல்லை - தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. 2 நாட்களாக 3 மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருக்கிறது. இதனால் அந்த மாவட்டங்களில் உள்ள அணைகள் நிரம்பியுள்ளன. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் குற்றாலத்தில் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாகவே குற்றால அருவிகளில் தொடர்ந்து தண்ணீர் கொட்டுவதால் ஆலங்குளம், பாவூர்சத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குளங்கள் முழுமையாக நிரம்பியுள்ளன. நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரதான பாசன அணையான பாபநாசம் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்த அணையில் இருந்து வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. கரையோரங்களில் வசித்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர். சேர்வலாறு அணையும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மணிமுத்தாறு, வடக்கு பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு ஆகிய அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. புதிதாக தொடங்கப்பட்ட தென்காசி மாவட்ட எல்லைக்குள் அடங்கிய கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார் ஆகிய 5 அணைகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இந்த அணைகளில் இருந்தும் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக மணிமுத்தாறில் 150.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அகஸ்தியர் அருவியே தெரியாத அளவுக்கு வெள்ளம் பாய்கிறது. பாபநாசம் கோவில் படித்துறை, தலையணை ஆகிய இடங்களிலும் அதிகளவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாபநாசம் மலைப்பகுதிக்கு எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படவில்லை. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் 18.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
பேச்சிப்பாறை நீர்மட்டம் உயர்வு
குமரி மாவட்டத்தில் அதிகபட்சமாக மயிலாடியில் 75.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. தொடர் மழையால் மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் குளங்கள் நிரம்பி உள்ளன. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 45 அடியாக உள்ளது. அணைக்கு நேற்று காலை 3 ஆயிரத்து 43 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பாதுகாப்பு கருதி அணையில் இருந்து 1000 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. குழித்துறை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 71.60 அடி தண்ணீர் உள்ளது.
திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு
கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் திற்பரப்பு அருவியில் அதிக அளவு தண்ணீர் கொட்டுகிறது. இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மழை காரணமாக கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் உள்ள அனைத்து அணைகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வனத்துறையினரோடு சேர்ந்து போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அணைகளில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோரங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆறுகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மூல வைகையாற்றில் வெள்ளம்
ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர் அணை தொடர்ந்து முழு கொள்ளளவில் நீடிக்கிறது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 104.98 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2036 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.தேனி மாவட்டத்தில் மூல வைகையாறு பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணையில் இருந்து மதுரை மாவட்ட குடிநீர் மற்றும் பாசனத்துக்காக 2090 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மஞ்சளாறு அணை நீர் மட்டம் 51.40 அடியாகவும், சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 124.54 அடியாகவும் உள்ளது. கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையின் மொத்த நீர் மட்டம் 60அடி. தற்போது அணையில் 47.79 அடி தண்ணீர் உள்ளது. அமராவதி அணையின் மொத்த நீர் மட்டம் 90 அடி. தற்போது 65.52 அடி தண்ணீர் உள்ளது.
நிரம்பியது வீராணம் ஏரி
நீலகிரி மாவட்டத்தில் எமரால்டு, பார்சன் வேலி, முக்குருத்தி, குந்தா ஆகிய அணைகளும் நிரம்பி உள்ளன. இதே போல தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஏரிகள், குளங்கள் நிரம்பி உள்ளன. கடலூர் மாவட்டத்தில் 8 ஆயிரம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அங்கு வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வீராணம் ஏரி நிரம்பி வழிகிறது. இதனால் ஏரியை சுற்றியுள்ள 25 கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அறந்தாங்கியில் 100 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்திலும் தொடர் மழையால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. வேலூரில் பெய்த மழையால் சாத்தனூர் அணை நிரம்பி வருகிறது. புதுவையிலும் தொடர் மழையால் ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன. அங்குள்ள பெரிய ஏரிகளான ஊசுட்டேரி, பாவூர் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
சர்வம் ஏ.ஐ. நிறுவனத்துடன் ஒப்பந்தம்: தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையழுத்து
13 Jan 2026சென்னை, தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலை வழங்கும் விதமாக சர்வம் ஏ.ஐ.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –13-01-2026
13 Jan 2026 -
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 10 பேரை விடுவிக்க நடவடிக்கை தேவை: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
13 Jan 2026சென்னை, இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்காக உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி
-
ஊர்க்காவல் படையில் தேர்வான திருநங்கைகளுக்கு நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
13 Jan 2026சென்னை, தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் தேர்வான திருநங்கைகளுக்கு நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
பொங்கல் பரிசை பெறாதவர்கள் இன்று பெற்றுக்கொள்ளலாம்: தமிழ்நாடு அரசு
13 Jan 2026சென்னை, தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளில் இன்றும் (ஜன. 14) பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
ஜனநாயகன் பட விவகாரம்: தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்: ராகுல் குற்றச்சாட்டு
13 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம், தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
பொங்கல் பண்டிகை தினத்தன்று தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா? வானிலை ஆய்வு மையம் விளக்கம்
13 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையன்று தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாடு கூட்டுறவு இணையத்தின் சார்பில் 80.62 கோடி ரூபாய் செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Jan 2026சென்னை, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.80.62 கோடி செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
சென்னை சங்கமம் - 2026 நிகழ்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்
13 Jan 2026சென்னை, பொங்கல் திருவிழாவையொட்டி, தமிழர்களின் பண்பாட்டுப் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று
-
ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25 சதவீத வரி: அதிபர் ட்ரம்பின் அறிவிப்பால் இந்தியாவுக்கு மேலும் பாதிப்பு
13 Jan 2026நியூயார்க், ஈரான் இஸ்லாமிய குடியரசு நாடுடன் வர்த்தகம் செய்து, அமெரிக்காவுடனும் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
-
ஜனநாயகன் பட விவகாரம்: தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்: ராகுல் குற்றச்சாட்டு
13 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம், தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
மாநில அரசுகள் பெரும் இழப்பீடு வழங்க நேரிடும்: தெரு நாய்கள் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
13 Jan 2026புதுடெல்லி, கடந்த 5 ஆண்டுகளாக தெரு நாய்கள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகள் அமல்படுத்தாதது குறித்து கவலை தெரிவித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், தெரு நாய்க்கட
-
சென்னையில் தே.ஜ. கூட்டணியினரின் பொதுக் கூட்டம்: பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் வருகிற 23-ம் தேதி நடைபெறுகிறது
13 Jan 2026சென்னை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டம் வருகிற 23-ம் தேதி சென்னையில் நடைபெறும் எனத் தகவல்கள் தெ
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
13 Jan 2026- சபரிமலையில் மகர ஜோதி தரிசனம்.
- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் தங்கப் பல்லக்கில் தங்க கவசம் அணிந்து மாலை ஆளேறும் பல்லக்கில் பவனி.
-
இன்றைய நாள் எப்படி?
13 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
13 Jan 2026


