முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நம்மாழ்வார் வேளாண் கல்லுாரியில் தேசிய கருத்தரங்கம்.

புதன்கிழமை, 29 ஜனவரி 2020      ராமநாதபுரம்
Image Unavailable

கமுதி, - கமுதி அருகே  பேரையூர் நம்மாழ்வார் வேளாண் தொழில்நுட்ப கல்லுாரியில் முதலாவது தேசிய கருத்தரங்கம் கல்லுாரி தலைவர் அகமது யாசின் தலைமையிலும், கள்ளிக்குளம் வேளாண் கல்லுாரியின் பூச்சியியல் துறை பேராசிரியர் அப்துல் ரசாக், மதுரை வேளாண் கல்லுாரி பேராசிரியர் மணிசேகரன் முன்னிலையிலும் நடந்தது. நம்மாழ்வார் வேளாண் தொழில்நுட்ப கல்லுாரி முதல்வர்  சரவணன் வரவேற்றார். நவீன வேளாண் திட்டத்தின் மூலம் விவசாயத்தில் பூச்சி கொல்லி மருந்தின் உபயோகத்தை குறைப்பது குறித்தும், நிலையான வேளாண் திட்டத்தில் இயற்கை விவசாய முறைகள் குறித்தும் கல்லுாரி பேராசிரியர்கள் பழனிச்சாமி, இபுறாஹிம் மாணவர்களுக்கு விளக்கினர். கருத்தரங்கம் குறித்த சிறப்பு நுால் வெளியீட்டை, கல்லுாரி தலைவர் அகமது யாசின் வெளியிட்டார்.  தமிழ்நாட்டிலுள்ள வேளாண் கல்லுாரிகளிலிருந்து மாணவர்கள் 150 பேர் பங்கேற்றனர். கருத்தரங்க ஏற்பாடுகளை வேளாண் பொறியியல் துறை பேராசிரியர் ராமச்சந்திரன், மாணவர் மன்ற ஒருங்கிணைப்பாளர் பிரவீன், இணை ஒருங்கிணைப்பாளர் காவ்யாவசந்தி செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து