எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : கொரோனா நோயிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு இணை நோயாளிகள் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாமை - எண்ணூரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் ஆய்வு செய்தார்.
சென்னை பெருநகர மநாகராட்சி மூலம் திருவொற்றியூர் மண்டலத்தில் கொரோனா நோயிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு அந்த பகுதி மக்களுக்கு இணை நோயாளிகளுக்காக சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. எண்ணூரில் நேற்று காமராஜர் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இணை நோயாளிகள் மருத்தவ சிறப்பு பரிசோதனை முகாமில் ஐ.ஏ.எஸ்.அதிகாரி ஜானிடாம்வர்கீஸ், மாவட்ட கழக செயலாளர் வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்;.ஏ.,கே.குப்பன், மண்டல அலுவலர் பால்தங்கதுரை, டிஸ்பி.ஆதிமூலம் ஆகியோர் முன்னிலையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று பார்வையிட்டார்.
பின்பு செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசியதாவது: திருவொற்றியூர் மண்டலத்தில் கொரோனா நோயிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு ரத்த சர்க்கரை, ரத்த அழுத்தம், யூரியா, இருதய நோய், ஆக்ஸிஜன் சொரிவு, யூரியா கிரியேட்டின், கருப்பை மற்றும் வாய்ப்புற்று நோய் பரிசோதனை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இதுவரை 15,724 பேர் இணை நோயாளிகளாக கண்டறியப்பட்டுள்ளனர். இந்த பரிசோதனை மூலம் இணை நோயாளிகளுக்கு கொரோனா தொற்று ஏற்படின் ஆரம்ப நிலையிலே கண்டறிந்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து நலம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சிறப்பு முகாம் மூலம் கொரோனா தொற்று கண்டறியப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 2000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. இந்த சிறப்பு முகாமிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
கடந்த ஒரு வாரமாக சென்னையில் குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகமாகவும், தொற்று எண்ணிக்கை குறைவாகவும் இறப்பு விகிதம் குறைவாகவும் உள்ளது. மற்ற மாநிலங்கனை காட்டிலும் கொரோனா தடுப்பு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. முதல்வர் தொடர்ந்து மருத்துவ நிபுணர் குழுவிடம் ஆலோசனை மேற்கொண்டு அவர்களின் ஆலோசனைகளோடு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அதன் அடிப்படையில் காய்ச்சல் முகாம் போன்று இணை நோய் சிறப்பு மருத்துவ முகாமும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. திருவொற்றியூர் மண்டலம் சுமார் 3.50 லட்சம் மக்கள் தொகை கொண்டது.
இங்கு உள்ள அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் அமைத்து இணை நோய் பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் நடத்தப்படும் மருத்துவ முகாம்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பொது ஊரடங்கின் மூலம் நல்ல பலன் கிடைத்துள்ளது.
ஜூலை 31 வரை பொதுபோக்குவரத்து தடை நீடிப்பு செய்யப்பட்டுள்ளது. சென்னை நகரம் வாழ தகுதி இல்லாத நகரம் என்று கூறப்பட்ட நிலையில் இப்பொழுது முதல்வர் எடுத்த பல்வேறு நடவடிக்கைகளான வீடுவீடாக சென்று காய்ச்சல், ஆக்ஸிஜன் பரிசோதனை போன்றவற்றால் தொற்று ஆரம்ப நிலையிலே கண்டறிந்து குணமாக்கப்படுகிறது.
தற்போது உள்ள ஊரடங்கு தளர்வுகளை மக்கள் தனது அத்தியாவசிய தேவைக்காக மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தேவையில்லாமல் அடிக்கடி வெளியே வர வேண்டாம். பொதுமக்கள் 100 சதவீதம் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் கொரோனா தொற்றை ஜீரோ நிலைக்கு கொண்டு வந்து விடலாம். தொழிலாளர்கள் தங்கள் ஊரிலிருந்து தாங்கள் வேலைபார்க்கும் தொழிற்சாலைக்கு பணிக்கும் செல்லும் இ-பாஸ் தொடர்பான பிரச்சினைக்கு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
முடிவில் திருவொற்றியூர் சங்கராச்சாரியார் காலனியில் உள்ள திருக்கோயில் அர்ச்சகர்கள் புரோகிதர்கள், ஏழை எளிய பிராமண சமூதாயத்தை சார்ந்த 100 குடும்பங்களுக்கு முன்னாள் எம்.எல்.ஏ., கே.குப்பன் ஏற்பாட்டில் தலா ஐந்து கிலோ அரிசி, மளிகை சாமான்கள் அடங்கிய தொகுப்பினை மாவட்ட கழக செயலாளர் வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ., தலைமையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.
அருகில் அதிமுக நிர்வாகிகள் கே.கார்த்திக், இ.வேலாயுதம், ஜி.ரவிக்குமார், புதுகை பாண்டியன், எஸ்.சங்கர், எஸ்.மா.அரசு, எம்.கண்ணன், தேரடி பரமசிவம், டி.ஸ்டீபன்ராஜ், விம்கோலெனின், எஸ்.பி.புகழேந்தி, எம்.தினகரன், பிராமண சங்கத்தலைவர் ஜெயராமன், உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
நடிகை மனோரமா மகன் பூபதி மறைவு
23 Oct 2025சென்னை, மனோரமா மகன் பூபதி நேற்று முன்தினம் சென்னையில் காலமானார்.
-
ஆஸ்திரேலியா அணியிடம் ஒருநாள் தொடரை இழந்தது இந்தியா
23 Oct 2025அடிலெய்டு: அடிலெய்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததை அடுத்து 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தொடரை வென்றுள்ளது.
-
ஸ்ரேயாஸ்-ரோகித் வாக்குவாதம்
23 Oct 2025அடிலெய்டில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
-
செறிவூட்டப்பட்ட அரிசி விவகாரத்தில் சட்டப்பேரவையில் தவறான தகவல்: அமைச்சர் மீது இ.பி.எஸ். குற்றச்சாட்டு
23 Oct 2025சென்னை: செறிவூட்டப்பட்ட அரிசிக்கு மத்திய அரசு இதுவரை அனுமதி வழங்கவில்லை என்று சட்டமன்றத்தில் தவறான தகவலை அமைச்சர் தெரிவித்துள்ளதாக அ.தி.மு.க.
-
இன்று முகூர்த்த தினம் எதிரொலி: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு
23 Oct 2025சென்னை, சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று முதல் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன.
-
தேவர் குருபூஜையில் பங்கேற்க வரும் 30-ம் தேதி பசும்பொன் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
23 Oct 2025சென்னை: தேவர் குருபூஜையை முன்னிட்டு வரும் 30-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் செல்கிறார். அங்கு உள்ள தேவர் சிலைக்கு
-
முதல் முறையாக ஐஸ்லாந்தில் கொசுக்கள் கண்டுபிடிப்பு
23 Oct 2025ரேக்ஜாவிக், ஐஸ்லாந்தில் முதல் முறையாக கொசுக்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து கொசுக்கள் இல்லாத நாடு என்ற பெருமையை ஐஸ்லாந்து இழந்துள்ளது .
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து தொடர்ந்து உயர்வு: குளிக்க - பரிசல் இயக்க தடை
23 Oct 2025தர்மபுரி, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
தொடர் சரிவில் தங்கம் விலை
23 Oct 2025சென்னை: தங்கம் விலை நேற்று குறைந்து விற்பனையானது.
-
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறந்தாலும் அடையாறு கரையோர மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது: அமைச்சர்
23 Oct 2025சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறந்தாலும் அடையாறு கரையோர மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
-
டெல்லியில் 4 ரவுடிகள் என்கவுன்ட்டர்
23 Oct 2025புதுடெல்லி, பீகாரை சேர்ந்த 4 ரவுடிகள் டெல்லியில் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
பீகார் சட்ட சபை தேர்தல்: இன்டியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி அறிவிப்பு
23 Oct 2025பாட்னா, பீகார் தேர்தலில் இன்டியா கூட்டணி கட்சிகளின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டார்.
-
நெல்லின் ஈரப்பத அளவை ஆய்வு செய்ய 9 பேர் கொண்ட மத்தியக்குழு விரைவில் தமிழ்நாடு வருகை தமிழக அரசின் கோரிக்கை ஏற்று மத்திய அரசு நடவடிக்கை
23 Oct 2025டெல்லி: நெல் கொள்முதல் செய்வது தொடர்பாக நெல்லின் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்துவது தொடர்பாக ஆய்வு செய்ய 9 பேர் கொண்ட மத்தியக்குழு விரைவில் தமிழ்நாடு வரவுள்ளது.
-
தாம்பரம் - செங்கல்பட்டு 4-வது ரயில் வழித்தடத்திற்கு ஒப்புதல்: மத்திய அரசுக்கு நயினார் நன்றி
23 Oct 2025சென்னை, தாம்பரம் - செங்கல்பட்டு 4-வது ரயில் வழித்தடத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியதையடுத்து நயினார் நாகேந்திரன் வரவேற்பு அளித்துள்ளார்.
-
வடகிழக்கு பருவமழை எதிரொலி: தமிழ்நாட்டில் 90 அணைகளில் 196 டி.எம்.சி. தண்ணீர் சேமிப்பு
23 Oct 2025சென்னை, வடகிழக்கு பருவமழை எதிரொலியாக தமிழகத்தில் உள்ள 90 அணைகளில் 196 டி.எம்.சி. தண்ணீர் சேமிக்கப்பட்டது.
-
வரும் 28-ம் தேதி தமிழ்நாடு வருகிறார் துணை ஜனாதிபதி
23 Oct 2025சென்னை, கோவையில் பா.ஜ.க. சார்பில் நடைபெறும் பாராட்டு விழாவில் பங்கேற்க துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வரும் 28-ம் தேதி தமிழ்நாடு வருகிறார்.
-
வரும் 29, 30-ம் தேதிகளில் தென்காசி மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பயணம் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்
23 Oct 2025சென்னை: வரும் 29, 30-ம் தேதிகளில் தென்காசி மாவட்டத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் செல்கிறார். அங்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார்.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: சி.பி.ஐ.யின் எப்.ஐ.ஆர். நீதிமன்றத்தில் தாக்கல்
23 Oct 2025கரூர், கரூர் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. பதிவு செய்த எப்.ஐ.ஆர். (முதல் தகவல் அறிக்கை) நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
ஆசியான் உச்சி மாநாடு: காணொளி மூலம் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி முடிவு
23 Oct 2025புதுடெல்லி: ஆசியான் உச்சி மாநாடுட்டில் பிரதமர் மோடி காணொளி மூலம் பங்கேற்கிறார்.
-
தரிசன டிக்கெட்டுகள் வாங்கி தருவதாக திருப்பதியில் ரூ.4 லட்சம் மோசடி
23 Oct 2025திருப்பதி, திருப்பதியில் வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகள் வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி நடைபெற்ற நிலையில், இடைத்தரகர் அசோக்ரெட்டியை போலீசார் கைது செய்தனர்.
-
இன்று 6 மாவட்டங்களில் கனமழை
23 Oct 2025சென்னை: தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
புகாரின் மீது வழக்குப்பதியாமல் காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்துவது கட்டப்பஞ்சாயத்துக்கு சமம் ஐகோர்ட் மதுரைக் கிளை கருத்து
23 Oct 2025மதுரை: புகாரை வாங்கி வைத்துக் கொண்டு வழக்குப்பதிவு செய்யாமல் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவது கட்டப்பஞ்சாயத்து நடத்துவதற்கு சமம் என்று ஐகோர்ட் மதுரை கி
-
மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு
23 Oct 2025மேட்டூர்: மேட்டூர் அணை 4-வது நாளாக உயர்ந்தது.
-
பிரபல இசையமைப்பாளர் சபேஷ் காலமானார்
23 Oct 2025சென்னை: பிரபல இசையமைப்பாளர் சபேஷ் நேற்று சென்னையில் காலமானார்.
-
மேற்கு வங்க மாநிலத்தில் ஆயிரம் வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்..!
23 Oct 2025கொல்கத்தா, மேற்கு வங்காளத்தில் 1,000 வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


