எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தமிழகத்தில் அக்டோபர் 31-ம்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னையில் நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு முதல்வர் இவ்வாறு அறிவித்துள்ளார். அதேநேரம் மாணவர்கள் பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களிடம் 1ம் தேதி முதல் சந்தேகங்களை கேட்கலாம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அது தொடர்பான அரசாணை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் சில தளர்வுகளையும் முதல்வர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதனால்தான் தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதோடு, சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்புவோர் சதவிகிதம் நாட்டிலேயே அதிகமாக உள்ளது.
பிரதமர் பாராட்டு
மேலும் நோய்த் தொற்றினால் ஏற்படும் உயிர் இழப்பும் குறைவாக இருந்து வருகிறது. அதனால்தான், பாரதப் பிரதமர் அவர்கள், கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிய அதிக எண்ணிக்கையில் ஆய்வக பரிசோதனை செய்தல், நோய்த் தொற்றை கட்டுப்படுத்துதல், சிகிச்சை அளித்தல் ஆகியவற்றில் தமிழ்நாடு முன்மாதிரி மாநிலமாக திகழ்கின்றது என்றும், தமிழ்நாட்டை பார்த்து பிற மாநிலங்கள் செயல்பட வேண்டும் என்றும் அண்மையில் நடைபெற்ற காணொலிக் காட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பாராட்டு தெரிவித்தார்.
நான் பல்வேறு தினங்களில் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையிலும், மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட 12 ஒருங்கிணைப்புக் குழுக்களின் கருத்துக்களின் அடிப்படையிலும், பல்வேறு தினங்களில் மாவட்ட ஆட்சியர்களின் காணொலிக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன் நடத்தப்பட்ட கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையிலும், தமிழ்நாட்டில் 30.9.2020 முடிய ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது. எனினும், பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கத்திலும், பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு
பல்வேறு தினங்களில் நான் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையிலும், 29.9.2020 அன்று நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்தும், கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், 30.9.2020 முடிய தமிழ்நாடு முழுவதும் தற்போதுள்ள பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும், 31.10.2020 நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது. எனினும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகளுடன்
குறிப்பாக கீழ்க்கண்ட பணிகளுக்கு தொடர்ந்து அனுமதி அளிக்கப்படுகிறது:
1) அரசால் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. பார்சல் சேவை இரவு 10 மணி வரை இயங்கஅனுமதிக்கப்படுகிறது.
படப்பிடிப்புகளுக்கு அனுமதி
2) திரைப்படத் தொழிலுக்கான படப்பிடிப்புகளுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு, ஒரே சமயத்தில் 100 நபர்களுக்கு மிகாமல் பணி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. படப்பிடிப்பின் போது பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.
3) தற்போது நாள்தோறும் சென்னை விமான நிலையத்தில் வெளி மாநிலங்களில் இருந்து 50 விமானங்கள் தரையிறங்க அனுமதித்துள்ள நிலையில், இனி 100 விமானங்கள் வரை தரையிறங்க அனுமதிக்கப்படுகிறது. இது தவிர கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, தூத்துக்குடி, சேலம் ஆகிய விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்க தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள நிலை தொடரும்.
4) அரசு மற்றும் அரசுத் துறை சார்ந்த பயிற்சி நிறுவனங்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
5) ஊரக மற்றும் நகரப் பகுதிகளில் உள்ள வாரச் சந்தைகள் மட்டும் உரிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
அரசாணை நிறுத்தி வைப்பு
மேலும், 29.8.2020 மற்றும் 8.9.2020 ஆகிய தேதிகளில் மத்திய அரசினால் வெளியிடப்பட்ட ஆணைகளின்படி, தமிழ்நாட்டில் 1.10.2020 முதல், அரசு பொதுத் தேர்வு எழுதும் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் பள்ளிகளுக்குச் சென்று ஆசிரியர்களிடம் ஐயப்பாடுகளை கேட்டறிய மட்டும் அனுமதித்து 24.9.2020 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.
இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு ஐயப்பாடுகளை கேட்டறிய மட்டும் வழங்கிய அனுமதி குறித்து கவனமுடன் செயல்படலாம் என்ற மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின்படியும், மருத்துவ நிபுணர்கள் அளித்த கருத்துக்களின் அடிப்படையிலும், தற்போதுள்ள கொரோனா நோய்ப்பரவலின் தன்மையை கருத்தில் கொண்டும்,
மாணவர்களின் பாதுகாப்பு கருதியும் மாணவர்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் பள்ளிகளுக்குச் சென்று ஆசிரியர்களிடம் ஐயப்பாடுகளை கேட்டறிய அனுமதிக்கும் அரசாணை தற்சமயம் நிறுத்தி வைக்கப்படுகின்றது. இது குறித்து மீண்டும் ஆய்வு செய்யப்பட்டு உரிய நேரத்தில் அனுமதி வழங்குவது பற்றி முடிவெடுக்கப்படும்.
மாநிலம் முழுவதும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144ன் கீழ் பொது இடங்களில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடக் கூடாது என்ற தடை உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும்.
தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்த விதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.
எதற்கெல்லாம் தடைகள்..?
ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்:--
• பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்களின் செயல்பாட்டிற்கான தடை தொடரும்.
திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் , பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலாத் தலங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடை நீடிக்கும்.
மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்.
• புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து, மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி விழாக்கள், பிற கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்த உள்ள தடை தொடரும்.
அம்மாவின் அரசு கடந்த செப்டம்பர் மாதம் அதிக அளவு தளர்வுகள் வழங்கிய நிலையிலும், நோய்த் தொற்று வேகம் மாநில அளவில் குறைந்துள்ளது. நோய் இறப்பு விகிதத்தை மேலும் குறைக்கவும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் வெளியில் செல்லும் போதும், பொது இடங்களிலும் முக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் முககவசத்தை கட்டாயம் அணிய வேண்டும். பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவுவதையும், வெளியிடங்களில் முககவசத்தை அணிந்து செல்வதையும், சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடித்தும், அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்தும், அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால் தான், இந்த நோய்த் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த முடியும்.
திருமண விழாக்களிலும், வழிபாட்டுத் தலங்களிலும், இறுதி ஊர்வலங்களிலும் மற்றும் பிற குடும்ப நிகழ்ச்சிகளிலும் பொதுமக்கள் கண்டிப்பாக அரசின் வழிமுறைகளை கடைப்பிடித்து நோய்த் தொற்றினை தவிர்க்க வேண்டும்.
எனவே, பொதுமக்கள், அரசு எடுத்துவரும் இத்தகைய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு நல்க கேட்டுக் கொள்கிறேன். நோய் தொற்றின் போக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பொதுமக்களின் ஒத்துழைப்பையும், நோய் தொற்றின் நிலையையும் கருத்தில் கொண்டு அவ்வப்போது தேவைக்கேற்ப மேலும் தளர்வுகள் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
எஸ்.ஐ.ஆர். வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை பார்ப்பது எப்படி?
19 Dec 2025சென்னை, எஸ்.ஐ.ஆர். வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை பார்ப்பது எப்படி என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-12-2025.
19 Dec 2025 -
100 நாள் வேலை திட்ட விவகாரம்: வரும் 24-ம் தேதி தி.மு.க. கூட்டணி கட்சிகள் மாபெரும் ஆர்ப்பாட்டம்
19 Dec 2025சென்னை, 100 நாள் வேலை திட்ட விவகாரத்தில் வரும் 24-ம் தேதி மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” மாநிலத்தில் உள்ள அனைத்து கழக ஒன்றியங
-
அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து சங்க நிர்வாகிகளுடன் டிச.22-ல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
19 Dec 2025சென்னை, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் வரும் 22ம் தேதி அமைச்சர்கள
-
ரோடு ஷோ, அரசியல் கட்சி கூட்டங்களுக்கு நெறிமுறைகளை ஜனவரி 5 - க்குள் வெளியிட அரசுக்கு ஐகோர்ட் கெடு
19 Dec 2025சென்னை, ரோடு ஷோ, அரசியல் கட்சி கூட்டங்களுக்கு இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை வருகிற ஜனவரி 5-ம் தேதிக்குள் வெளியிட தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
கலசப்பாக்கம், அரக்கோணம் உள்ளிட்ட 3 தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
19 Dec 2025சென்னை, கலசப்பாக்கம், அரக்கோணம் உள்ளிட்ட 3 தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் ஆலோசனை நடத்தினார்.
-
சென்னையில் மட்டும் வரைவு வாக்காளர் பட்டியலில் மூன்றில் ஒருவரது பெயர் நீக்கம்
19 Dec 2025சென்னை, சென்னையில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் மூன்றில் ஒருவரது பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
-
அடுத்த 2 ஆண்டுகளில் உக்ரைனுக்கு 90 பி. யூரோ நிதியுதவி வழங்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்
19 Dec 2025பிரசல்ஸ், அடுத்த 2 ஆண்டுகளில் உக்ரைனுக்கு 90 பி. யூரோ நிதியுதவி வழங்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.
-
சேலத்தில் டிசம்பர் 30-ம் தேதி த.வெ.க.வின் பொதுக்கூட்டம்? விரைவில் அறிவிப்பு வெளியாகிறது
19 Dec 2025சேலம், ஈரோட்டில் த.வெ.க.
-
43.53 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 125 புதிய மின்சாரப் பேருந்துகள்: துணை முதல்வர் உதயநிதி துவக்கி வைத்தார்
19 Dec 2025பூந்தமல்லி மின்சாரப் பேருந்து பணிமனை மற்றும் புதிதாக 125 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகளின் சேவையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (வெள்ளிக்கிழமை) கொடியசைத்து த
-
செவிலியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
19 Dec 2025சென்னை, செவிலியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
பீகார் ஹிஜாப் சர்ச்சை: அரசு வேலையை உதறிய பெண்..!
19 Dec 2025பீகார் ஹிஜாப் சர்ச்சையால் அரசு வேலையை வேண்டாம் என்ற புறக்கணித்த பெண் டாக்டர், பீகாரை விட்டு வெளியேறி பெற்றோர் வசிக்கும் கொல்கத்தா நகருக்கு சென்றதாக தகவல் வெளியாகி
-
குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு: பாராளுமன்ற இரு அவைகளும் காலவரையின்றி ஒத்திவைப்பு
19 Dec 2025புதுடெல்லி, பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இரு அவைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன.
-
தங்கம், வெள்ளி விலை சற்று சரிவு
19 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்று சற்று குறைந்து விற்பனையானது. அதன்படி தங்கம் 1 கிராம் ரூ.12,380-க்கும், சவரன் ரூ.99,040-க்கும் விற்பனையானது.
-
துணை ராணுவம் திடீர் தாக்குதல்: சூடானில் 16 பேர் பலி
19 Dec 2025கார்டூமின், வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள சூடானில் உள்ள தெற்கு கார்டூமின் மாகாணம் டில்லிங் பகுதியில் துணை ராணுவப்படையினர் நேற்று தாக்குதல் நடத்தினர்.
-
காந்தி பெயர் நீக்கத்திற்கு எதிர்ப்பு: பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் 2-வது நாளாக போராட்டம்
19 Dec 2025புதுடெல்லி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரிலிருந்து மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டதற்கும், புதிய திட்டத்தில் ஏழைகளுக்கு பாதகமாக உள்ள அம்சங
-
பனிமூட்டம் காரணமாக டெல்லியில் 152 விமானங்கள் ரத்து
19 Dec 2025புதுடெல்லி, பனிமூட்டம் காரணமாக டெல்லியில் நேற்று 79 விமானங்களின் புறப்பாடு மற்றும் 73 விமானங்களின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
செவிலியர் பணிக்கு காலி இடங்கள் தற்போது இல்லை: அமைச்சர் தகவல்
19 Dec 2025சென்னை, செவிலியர் பணிக்கு தற்போது காலி பணியிடங்களே இல்லாத நிலை உள்ளது. காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
-
என்னை வளர்த்தெடுத்த ஆசான்: பேராசிரியர் அன்பழகனுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
19 Dec 2025சென்னை, என்னை வளர்த்தெடுத்த கொள்கை ஆசான்களில் ஒருவர் என்று பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாளை முன்னிட்டு தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், கட்சியின் தொடர் வெற்றிகளை பே
-
தமிழ்நாட்டில் வெளியானது வரைவு வாக்காளர் பட்டியல்: மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5.43 கோடி: 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் அதிரடி நீக்கம்
19 Dec 2025சென்னை, தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையர் அர்சனா பட்நாயக் நேற்று வெளியிட்டார், இதை தொடர்ந்து அந்தந்த மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் வரைவு வாக்க
-
வங்காளதேசத்தில் இந்து மதத்தை சேர்ந்த இளைஞர் அடித்த கொலை
19 Dec 2025டாக்கா, வங்காளதேசத்தில் இந்து மத இளைஞர் அடித்துக்கொலை செய்யப்பட்டு அவரது உடலை நடுரோட்டில் தீ வைத்து எரித்த கும்பலால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.
-
வி.பி.-ஜி ராம் ஜி மசோதாவுக்கு எதிர்ப்பு: பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் விடியவிடிய தர்னா
19 Dec 2025புது டெல்லி, வி.பி.-ஜி ராம் ஜி மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 12 மணி நேரம் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
சென்னையில் பிட்புல், ராட்வீலர் நாய்களுக்கு இன்று முதல் தடை மீறினால் ரூ.1 லட்சம் அபராதம்
19 Dec 2025சென்னை, சென்னை மாநகராட்சியில் பிட்புல் மற்றும் ராட்வீலர் இன வளர்ப்பு நாய்களை வளர்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது மீறி வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நெல்லை பயணம்: 2 நாட்களில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்கிறார்
19 Dec 2025நெல்லை, நெல்லையில் இன்றும், நாளையும் (டிச.20, 21ல்) முதல்வர் மு.க. ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
-
இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: பிரதமர் மோடி குறித்து அமெரிக்கா பெருமிதம்
19 Dec 2025சென்னை, இந்தியாவில் ஒரு நண்பர் இருப்பதாக பிரதமர் மோடியின் படத்தை அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ளது.


