எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கொழும்பு : இலங்கை அரசு விசா வழங்குவதை நிறுத்தியுள்ளதாக வெளிவந்த தகவலை அங்குள்ள இந்திய தூதரகம் மறுத்துள்ளது.
இலங்கையில் ராஜபக்சே சகோதரர்கள் மேற்கொண்ட தவறான கொள்கை முடிவுகளால் கடுமையான பொருளாதார சீரழிவு ஏற்பட்டுள்ளது. அங்கு அத்தியாவசியப் பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்து விட்டது. இதனால் பொதுமக்கள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்க இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகள் உதவிகள் செய்து வருகின்றன. இதற்கிடையே, இலங்கையின் 26-வது பிரதமராக அதிபர் கோத்தபய ராஜபக்சே முன்னிலையில் ரணில் விக்ரமசிங்கே நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், இலங்கை அரசு விசா வழங்குவதை நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவலை இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மறுத்துள்ளது. இதுகுறித்து, இந்திய தூதரகம் நேற்று வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், விசா வழங்குவது நிறுத்தம் என்ற செய்தி தவறானது.
விசா பிரிவில் பணியாற்றும் ஊழியர்களில் பலர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால் பணியில் சற்று சுணக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு வேண்டிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என பதிவிட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |


