எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஏப்.18 - தன்னிச்சையான செயல்பாடு காரணமாக தங்கபாலுவின் பதவி பறிபோகிறது. தமிழக காங்கிரஸ் என்றாலே கோஷ்டி பூசல், அடிதடி, அறிக்கை போர் என்று எல்லாம் நடக்கும். தமிழக காங்கிரஸ் வரலாற்றிலேயே நகைப்புக்குரிய ஒரு தலைவர் இருந்தது கிடையாது. காமராஜர் முதல் பல்வேறு தலைவர்கள் இருந்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியில் தனது மனைவிக்கு ஓட்டு இருப்பது கூட தெரியாத ஒரு தலைவர் தமிழ்நாட்டில் உள்ளார் என்றால் அது தங்கபாலுவாகத்தான் இருக்க முடியும்.
கூட்டணி கட்சி என்ற முறையில் நட்பு பாராட்டுவது நாகரீகம். ஆனால், கூட்டணி கட்சியான தி.மு.க.விலேயே ஒரு கோஷ்டி தலைவராக மாறியது தான் தங்கபாலுவின் சாதனை.
5 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் ஒட்டி உறவாடி மக்களைப்பற்றி கவலைப்படாத தங்கபாலு, தி.மு.க. தலைமையின் மூலம் தனது தலைவர் பதவியை காப்பாற்றிக்கொள்வதில் குறியாக இருந்தார். தமிழக காங்கிரசின் எந்த கோஷ்டியும் தங்கபாலுவை கண்டு கொண்டதில்லை. ஆனாலும் தங்கபாலுதான் தலைவர்.
சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் தங்கபாலு தனது செல்வாக்கை பயன்படுத்தி கூட்டணி பற்றி பேசப்பட்ட ஐவர் குழுவில் பிரச்சனைக்குரிய இளங்கோவன் போன்றோரை இடம்பெறாமல் செய்தார்.
பின்பு, தி.மு.க.வுடன் நடத்திய பேச்சுவார்த்தை இழுபறி நடந்தபோது தி.மு.க.வை ஊழல்கட்சி என்று விமர்சித்தார். மறுநாள் சேர்ந்தவுடன் வெற்றி கூட்டணி என்றார். கூட்டணியில் 63 தொகுதிகள் முடிவானதும் வேட்பாளர் ஒதுக்குவதில் ஐவர் குழுவை கலந்தாலோசிக்காமல் தனியொருவராக 63 தொகுதிகளில் வேட்பாளர் தேர்வு செய்தார். இவரது பட்டியலை நிராகரிக்க வேண்டுமென்று சிதம்பரம், ஜி.கே.வாசன், இளங்கோவன் உள்ளிட்டோர் சோனியாவிடம் முறையிட்டனர்.
ஆனாலும், தங்கபாலுவின் பட்டியல் வெளியானது. அதன்பிறகு தான் தமிழக காங்கிரஸில் வெட்டு, குத்து அதிகமானது. போட்டி வேட்பாளர்கள், மோதல், மறியல், கொடும்பாவி எரிப்பு என தொடர்ந்தது. தேர்தல் முழுதும் இந்த போராட்டங்கள் தொடர்ந்து, வாக்குப்பதிவு வரையும் கூட நீடித்தது. இதனால் காங்கிரஸ் 63 தொகுதிகளிலும் எதிர்க்கட்சி வேட்பாளர்களுடன் தனது கட்சிக்குள் உள்ள போட்டி வேட்பாளர்களுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்தது.
தங்கபாலு இன்னும் ஒருபடி மேலே போய், தனது மனைவியை மயிலாப்பூர் தொகுதி வேட்பாளராக்கினார். டம்மி வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் தலைவரான தன் பெயரையே முன்மொழிந்துகொண்டார். மனைவியின் படிவத்தை சரிவர நிரப்பாததால் தள்ளுபடி ஆகி, டம்மி வேட்பாளர் தங்கபாலு காங்கிரஸ் வேட்பாளரானார். இதே போல் கிருஷ்ணகிரி மற்றும் விளவங்கோடு தொகுதிகளிலும் வேட்பாளர் தேர்வில் ஏகப்பட்ட குழப்பம். ஒரு தலைவர் சட்டசபை தேர்தலில் நிற்கலாமா என்ற சர்ச்சை எழுந்தது.
தேர்தல் பிரச்சாரத்தில் சிதம்பரம், வாசன், இளங்கோவனின் பங்கு சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இந்நிலையில் தேர்தல் முடிந்தவுடன் அதிரடியாக கராத்தே தியாகராஜன் உள்பட 18 பேர்களை காங்கிரஸ் கட்சியை விட்டு தங்கபாலு நீக்கினார்.
இது கட்சி விரோத செயல். நீக்குவதற்கு தங்கபாலுக்கு உரிமை இல்லை என்று அனைவரும் குரல் கொடுத்தனர். நீக்கப்பட்டவர்களில் வாசன், சிதம்பரம், இளங்கோவன் கோஷ்டியை சேர்ந்தவர்கள் இருந்தனர். ஐவர்குழுவில் இருந்த ஜெயக்குமார் எம்.எல்.ஏ. கட்சி விதிகளை காரணம் காட்டி தங்கபாலு கட்சி விரோத செயல்களில் ஈடுபடுகிறார். யாரையும் நீக்க தங்கபாலுக்கு உரிமையில்லை. வேட்பாளர் தேர்விலும் தங்கபாலு தன்னிச்சையாக செயல்பட்டார் என்று குற்றம் சாட்டினார்.
தமிழக காங்கிரஸ் தி.மு.க.விடம் 63 இடங்களை போராடி பெற்றது. அதை ஒழுங்காக அறுவடை செய்யாமல் வேட்பாளர் தேர்வில் ஏகப்பட்ட குளறுபடி செய்ததால் காங்கிரஸ் தமிழ்நாட்டில் 8 இடங்கள் பெற்றால் பெரிய விஷயம் என்ற செய்தி சோனியாகாந்தி வரை எடுத்து சொல்லப்பட்டு இருப்பதால் தங்கபாலுவை நீக்கும் முடிவுக்கு சோனியா வந்துவிட்டாராம்.
தேர்தல் முடிவும் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக அமையும் என்பதால் இனியும் தி.மு.க.வை கூட்டணியில் வைத்துக்கொள்ள சோனியா விரும்பவில்லை. ஆகவே, மற்றவர்களும் ஏற்றுக்கொள்ளும் ஒரு தலைவர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு வரலாம். அது ஜி.கே.வாசன் அல்லது சுதர்சன நாச்சியப்பனாக இருக்கலாம் என்ற கருத்து காங்கிரசுக்குள் ஓடுகிறது.
எது எப்படி இருந்தாலும் தங்கபாலுவுக்கு கல்தா உறுதி என்று காங்கிரஸ் வட்டாரங்களில் பேச்சு பலமாக உள்ளது. உடனே அறிவிப்பு வெளிவரும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-09-2025.
13 Sep 2025 -
திண்டுக்கல் அருகே மின் கசிவு காரணமாக பஞ்சு ஆலையில் திடீர் தீ விபத்து : பல லட்சம் மதிப்பிலான பஞ்சு எரிந்து நாசம்
13 Sep 2025திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பிள்ளையார்நத்தம் பகுதியில் தனியார் பஞ்சு ஆலையில் வெள்ளிக்கிழமை இரவு பயங்கர தீ விபத்து நிகழ்ந்தது.
-
7.4 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
13 Sep 2025மாஸ்கோ : 7.4 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானதாக சனிக்கிழமை காலை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலை சற்று சரிவு
13 Sep 2025சென்னை : உலக நாடுகள் இடையிலான போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வர
-
மிசோரத்தில் ரூ. 8,070 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பைராபி-சாய்ராங் புதிய ரயில் பாதை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
13 Sep 2025ஐஸ்வால் : மிசோரமில் பைராபி - சாய்ராங் புதிய ரயில் பாதையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.
-
நேபாளத்தில் அடுத்தாண்டு மார்ச் 5-ம் தேதிக்குள் தேர்தல் : இடைக்கால அரசு அறிவிப்பு
13 Sep 2025காத்மாண்டு : வன்முறை வெறியாட்டத்தில் சிக்கி தவித்த நேபாளத்தில் அடுத்தாண்டு மார்ச் 5ம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்படும் இடைக்கால அரசு அறிவித்துள்ளது.
-
பலூனில் பறக்கும் போது பிடித்த தீ; அதிர்ஸ்டவசமாக உயிர் தப்பிய ம.பி. முதல்வர் மோகன் யாதவ்
13 Sep 2025போபால் : மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் சென்ற வெப்ப காற்று பலூன் தீப்பிடித்தது. இதில் அவர் நல்வாய்ப்பாக உயிர்தப்பினார்.
-
மணிப்பூரை வளர்ச்சியின் அடையாளமாக மாற்ற விரும்புகிறேன்: பிரதமர் மோடி
13 Sep 2025இம்பால், மணிப்பூரை வளர்ச்சியின் அடையாளமாக மாற்ற விரும்புகிறேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
-
வரும் 22-ம் தேதி முதல் அமலாகும் ஜி.எஸ்.டி. வரி விகித மாற்றத்தால் விலை உயரும் பொருட்கள் எவை? வெளியான புதிய தகவல்கள்
13 Sep 2025புதுடெல்லி. வரும் 22-ம் தேதி முதல் அமலாகும் ஜி.எஸ்.டி. வரி விகித மாற்றத்தால் விலை உயரும் பொருட்கள் எவை என்பது குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
பழைய எதிரிகள் - புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும் தி.மு.க. எஃகு கோட்டையை தொட்டுக்கூட பார்க்க முடியாது : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
13 Sep 2025சென்னை : பழைய எதிரிகள் - புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும் தி.மு.க.
-
வெளிநாட்டு தொலைக்காட்சி தொடர்களை பார்க்கும் குடிமக்களுக்கு மரண தண்டனை விதிப்பு? ஐ.நா. அறிக்கைக்கு வடகொரியா கடும் எதிர்ப்பு
13 Sep 2025பியாங்யாங், வெளிநாட்டு தொலைக்காட்சி தொடர்களை பார்த்தால் குடிமக்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதாக ஐ.நா.
-
வரும் 20-ம் தேதி நடைபெற இருந்த நாகையில் விஜய் பிரசாரத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு
13 Sep 2025நாகை, நாகை மாவட்டம் அவுரித்திடலில் வரும் 20-ந்தேதி த.வெ.க. தலைவர் விஜயின் பிரசாரத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
-
பாக்.கிற்கு எதிரான போட்டியில் இந்தியா விளையாடுவதற்கு பி.சி.சி.ஐ-க்கு கடும் எதிர்ப்பு
13 Sep 2025துபாய் : பாக்.கிற்கு எதிரான போட்டியில் இன்று இந்திய அணி விளையாடுவதற்கு பி.சி.சி.ஐ.,க்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
-
மத்திய அரசு திட்டங்களுக்கு நேரடி நிதி; ரிசர்வ் வங்கியில் கணக்கு துவக்கிய தமிழ்நாடு அரசு
13 Sep 2025சென்னை : மத்திய அரசின் உதவியுடன், மாநில அரசுகள் செயல்படுத்தும் திட்டங்களுக்கான செலவு தொகையை, நேரடியாக வழங்கும் பணி துவங்கி உள்ளது.
-
கிரிக்கெட் உபரகணங்கள் வழங்கும் நிகழ்ச்சி: அ.தி.மு.க. விளையாட்டு அணியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் : எடப்பாடி பழனிசாமி பேச்சு
13 Sep 2025கோவை : அ.தி.மு.க.வில் உள்ள விளையாட்டு அணியிலும் வீரர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளது.
-
வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணி: அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை : தமிழக தலைமைத்தோ்தல் அதிகாரி தகவல்
13 Sep 2025சென்னை : தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் தொடா்பாக, தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் விளக்கம் அளித்துள்ளாா்.
-
இங்கிலாந்து அணிக்காக அதிவேக சதம்: பிலிப் சால்ட் புதிய சாதனை
13 Sep 2025மான்செஸ்டர் : டி-20 போட்டியில் லியாம் லிவிங்ஸ்டன் சாதனையை முறியடித்து இங்கிலாந்து அணிக்காக அதிவேக சதம் அடித்து பிலிப் சால்ட் புதிய சாதனை படைத்துள்ளார்.
-
பாலஸ்தீன பிரச்னைக்கு அமைதி வழியில் தீர்வு: ஐ.நா. தீர்மானத்துக்கு 142 நாடுகள் ஆதரவு : அமெரிக்கா உள்ளிட்ட 10 நாடுகள் எதிர்ப்பு
13 Sep 2025நியூயார்க் : பாலஸ்தீன பிரச்னைக்கு அமைதி வழியில் தீர்வு ஏற்படுத்த கோரும் ஐ.நா. தீர்மானத்திற்கு இந்தியா உட்பட 142 நாடுகள் ஆதரவாக ஓட்டளித்தன.
-
மக்களுக்கு இடையூறு செய்யும் கட்சி அல்ல தி.மு.க. - முதல்வர்
13 Sep 2025சென்னை : மக்களுக்கு இடையூறு செய்யும் கட்சி அல்ல தி.மு.க. என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
பழநி கோவிலுக்கான ரூ.100 கோடி நிலம் மீட்பு
13 Sep 2025பழநி, பழநி முருகன் கோவில் நிர்வாகத்தின் கீழ் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டது.
-
2வது டி-20-யில் அபார வெற்றி: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய இங்கிலாந்து
13 Sep 2025மான்செஸ்டர் : 2-வது டி-20 போட்டியில் ஜோஸ் பட்லர் மற்றும் பிலிப் சால்ட்டின் அபார பேட்டிங்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றிப்பெற்றது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
13 Sep 2025மேட்டூர் : மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சனிக்கிழமை காலை வினாடிக்கு 19,228 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
காங்கோவில் பயங்கரம்: 2 படகு விபத்துகளில் 193 பேர் பலி
13 Sep 2025கின்சாஹா : காங்கோவில் நிகழ்ந்த 2 படகு விபத்துகளில் 193 பேர் பலியான சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
நேபாள இடைக்கால அரசின் பிரதமராக சுசீலா பதவியேற்பு : பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து
13 Sep 2025புதுடில்லி : நேபாள இடைக்கால அரசின் பிரதமராக பதவியேற்றுள்ள முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இன்று ஜப்பான் தலைநகரில் தொடங்கும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்வாரா நீரஜ் சோப்ரா?
13 Sep 2025டோக்கியோ : உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி இன்று ஜப்பானில் துவங்கவுள்ள நிலையில் இன்று தங்கப்பதக்கம் வெல்வாரா நீரஜ் சோப்ரா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்கள் இடையே எழுந்த