எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அ.தி.மு.கவில் ஒற்றைத் தலைமை குறித்து பாஜக எந்த கருத்தும் கூறாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் மாற்றுக்கட்சியினர் பாரதிய ஜனதா கட்சியில் இணையும் விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு கட்சியின் திருவாரூர் மாவட்ட தலைவர் ச.பாஸ்கன் தலைமை வகித்தார். இந்த விழாவின் போது கட்சியில் இணைந்த அனைவரையும் வரவேற்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பேசினார். அப்போது அவர் கூறியதாவது,
அம்பேத்கர் 1951-ல் பண்டித ஜவகர்லால் நேரு தலைமையில் சட்ட அமைச்சராக இருந்தார். ஆங்கிலேயே அரசு சட்டம் மற்றும் நீர் மேலாண்மை பொறுப்புகளை அம்பேத்கர்க்கு வழங்கியிருந்தது. நேரு ஆட்சியில் அம்பேத்கர்க்கு சட்ட அமைச்சர் பதவி மட்டுமே வழங்கியது. நேரு அமைச்சரவையில் நீர் மேலாண்மை பொறுப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார் அம்பேத்கர். பட்டியலினத்தை சேர்ந்தவர்களுக்கு கேபினட்டில் சாதாரண பொறுப்புகளை மட்டுமே கொடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள்.
பிரதமர் நரேந்திர மோடி பட்டியலினத்த சேர்ந்தவர்களுக்கு கட்சியிலும் ஆட்சியிலும் முக்கிய பதவிகளை வழங்கியுள்ளார். குறிப்பாக ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி யாக்கியுள்ளார். சமூக நீதியை காப்பாற்றும் கட்சி பாஜக தான். தமிழகத்தில் சமூக நீதி பற்றி திமுக பொய் பேசி வருகிறது. பட்டியிலன மக்களுக்கு பாஜக செய்துள்ள உண்மையை பற்றி பேசி வருகிறோம். அம்பேத்கருக்கு துரோகம் செய்தவர்கள் காங்கிரஸ் கட்சி தான். இந்திய அரசியல் சாசன தலைவராக பரிந்துரை செய்தது ஜன சங்கம். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் , ஒற்றைத் தலைமை என்பது கட்சியின் தலைவர்கள், தொண்டர்களின் முடிவு தான்; யாரும் கருத்து சொல்லக்கூடாது. அ.தி.மு.கவில் ஒற்றைத் தலைமை குறித்து பாஜக எந்த கருத்தும் கூறாது என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


