முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரி வருவாய் குறைஞ்சு போனதால் மதுபான விற்பனையை அதிகரிக்க போட்டி நடத்தும் ஜப்பான் அரசு

வெள்ளிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2022      உலகம்
Japan-Mathu 2022-08-19

ஜப்பானில் பெற்றோர்களை விட இளம் தலைமுறையினர் குறைவாக குடிப்பதால், அவர்களிடம் மதுபான நுகர்வை அதிகப்படுத்தும் ஐடியாக்களை தெரிவிக்கும் போட்டியினை அந்நாட்டின் தேசிய வரி முகமை தொடங்கியுள்ளது. ஜப்பான் அரசின் இத்திட்டத்திற்கு அந்நாட்டினர் பலரும் சமூக ஊடகங்களில் எதிர்ப்பை பதிவிட்டு வருகின்றனர்.

ஜப்பானில் கொரோனா பெருந்தொற்றினால் 40 வயதிற்கு மேற்பட்டோர் மது குடிப்பதை குறைத்துக் கொண்டனர். இதனால் மதுபான விற்பனை மூலம் அரசுக்கு கிடைக்கும் வரி வருவாய் பெருமளவு குறைந்தது. கொரோனா, பிறப்பு விகிதம் குறைந்தது, வயதானவர்கள் எண்ணிக்கை பெருகியது ஆகியவை இந்த சரிவுக்கு காரணம் என்கின்றனர். ஜப்பானில் 3-ல் ஒரு பங்கினரின் வயது சராசரியாக 65 ஆகும். இந்நிலையில் 2020-ல் மதுபான வருவாய் 6 ஆயிரம் கோடி ரூபாயாக ஆனது. அதற்கு முந்தைய ஆண்டில் மதுபானம் மூலமான வருவாய் 66 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. 1989-க்கு பிறகு ஜப்பானில் மது விற்பனையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய வீழ்ச்சியை இது குறிக்கிறது.

2020-க்கு முன்பு வரை ஆண்டுக்கு சராசரியாக நூறு லிட்டர் மதுபானங்கள் அருந்தியவர்கள், தற்போது 75 லிட்டர் தான் அருந்துகிறார்களாம். இதனால் ஜப்பான் அரசு தங்கள் நாட்டு இளைஞர்களிடம் மதுபான விற்பனையை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக சாக்கே விவா பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது.  சாக்கே என்பது ஜப்பானிய மதுபான வகையாகும். இது அரிசியை நொதிக்க வைத்து தயாரிக்கப்படுகிறது. தண்ணீர் போன்று காணப்படும் இந்த பானம் ஒயினை விட அதிக ஆல்கஹால் கொண்டது. 

இந்த சாக்கே விவாவின் ஒரு பகுதியாக 20 முதல் 39 வயதினர் எப்படி எல்லாம் மீண்டும் மதுபான விற்பனையை அதிகப்படுத்தலாம் என்ற பிசினஸ் ஐடியாக்களை கூற வேண்டும். இந்தப் போட்டியில் பங்கேற்கும் இளைஞர்கள் மது விற்பனையை கூட்டும் விளம்பரம், பிராண்டிங், நவீன தொழில்நுட்பம் பயன்படுத்துவது போன்ற ஐடியாக்களை கூற வேண்டும். செப்டம்பர் வரை இந்த போட்டி நடைபெறும் அதற்குள் தங்களது ஐடியாக்களை வழங்கலாம். அதில் சிறந்த திட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு அவை நிபுணர்கள் கொண்டு மேம்படுத்தப்படும். அதன் இறுதி திட்ட அறிக்கை நவம்பர் மாதம் அரசுக்கு சமர்பிக்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து