முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய பங்குச் சந்தை ஊழல் வழக்கு: சித்ரா ராமகிருஷ்ணனுக்கு டெல்லி ஐகோர்ட் ஜாமீன்

புதன்கிழமை, 28 செப்டம்பர் 2022      வர்த்தகம்
Chitra-Ramakrishnan-2022 09

தேசியப் பங்குச் சந்தை ஊழியர்களின் செல்போன்கள் ஒட்டுகேட்கப்பட்ட விவகாரத்தில் அதன் முன்னாள் இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணனுக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2013ஆம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை தேசிய பங்குச் சந்தையின் இயக்குனராக இருந்த சித்ரா ராமகிருஷ்ணனை, தேசியப் பங்குச் சந்தையின் ரகசியத் தகவல்களை முன்கூட்டியே பங்கு நிறுவனங்களின் சர்வரிலிருந்து எடுக்க உதவியதாகக் கூறப்படும் 'கோ-லொக்கேஷன்' ஊழல் தொடர்பான வழக்கில் கைது செய்து விசாரித்து வருகிறது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகிய விசாரணை அமைப்புகள். இவர் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவ்வழக்கில் ஜாமீன் கோரி சித்ரா ராமகிருஷ்ணன் தரப்பில் டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.  இம்மனு மீதான வழக்கில் கடந்த மே மாதம் உத்தரவிட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுனைனா சர்மா, சித்ரா ராமகிருஷ்ணன் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்வதாக தெரிவித்தார். 

இதற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கின் நேற்று உத்தரவு பிறப்பித்த டெல்லி உயர்நீதிமன்றம், சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணனுக்கு ஜாமீன் வழங்கியது. நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஆஃப் இந்தியா லிமிடெட்டின் (NSE) முன்னாள் குழு தலைமை செயல் அதிகாரி ஆனந்த் சுப்ரமணியமுக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து