Idhayam Matrimony

பாகிஸ்தான் அணியில் மீண்டும் அப்ரிடிக்கு இடம்

வெள்ளிக்கிழமை, 22 பெப்ரவரி 2013      விளையாட்டு
Image Unavailable

 

கராச்சி, பிப். 23 - பாகிஸ்தான் ஒரு நாள் போட்டிக்கான அணியில் மூத்த வீரரும், அதிரடி வீரரு மான சாகித் அப்ரிடி மீண்டும் இடம் பெற்று இருக்கிறார்.  தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொ டர் விரைவில் நடக்க இருக்கிறது. இத ற்காக அறிவிக்கப்பட்ட ஒரு நாள் போ  ட்டி அணியில் அப்ரிடி இடம் பெற்று இருக்கிறார். கடந்த டிசம்பர் மாதம் இந்திய அணிக்கு எதிராக நடந்த ஒரு நாள் தொடரில் அப்ரிடி இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆனால் டி - 20 போட்டியில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. தெ. ஆ.விற் கு எதிரான டி - 20  யிலும் அப்ரிடி இட ம் பெற்றுள்ளார். 

இது குறித்து தேர்வுக் குழுத் தலைவ ரான இக்பால் காசிமிடம் கேட்ட போ து, அப்ரிடி தனது திறமையை நிரூபிக்க தேசிய அணியில் இதுவே கடைசி வா  ய்ப்பு என்றார் அவர். 

மேலும் அப்ரிடி ஒரு சிறந்த வீரர் தான் என்ற போதிலும், தொடர்ந்து சிறப்பா  க ஆடினால் தான் அணியில் இடம் பெற முடியும் என்று டெஸ்ட் அணியின் முன்னாள் சுழற் பந்து வீரரான காசிம் தெரிவித்தார்.

தவிர, கடந்த சில மாதங்களாக அப்ரிடி ரன் எடுக்கவும், விக்கெட் எடுக்கவும் திணறினார். இருந்த போதிலும், அவர் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறோம். பாகிஸ்தான் ஏ அணிக்கும், ஆப்கானி ஸ்தான் அணிக்கும் இடையே சமீபத்தி ல் போட்டி நடந்தது. இதில் அப்ரிடி நன்கு ஆடியதைத் தொடர்ந்து அவருக் கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.  

34 வயதான பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான அப்ரி டி இதுவரை 349 ஒரு நாள் போட்டியி லும், 50 டி - 20 போட்டியிலும் ஆடி இருக்கிறார் . 

அடுத்து நடக்க இருக்கும் ஒரு நாள் போட்டி மற்றும் டி -20 போட்டிகளை சோதனைக் களமாக பயன்படுத்த தேர் வுக் குழுவினர் முடிவு செய்துள்ளனர். 

இதனைக் கருத்தில் கொண்டே, வேகப் பந்து வீச்சாளர் வகாப் ரியாஸ், முன் னாள் கேப்டன் சோயிப் மாலிக் விக்கெட் கீப்பர் கம்ரன் அக்மல், அவரது சகோதரர் உமர் அக்மல் மற்றும் அப்ரிடி ஆகியோர் தோர்வு செய்யப்பட்டு உள்ளனர். மேற்படி 5 வீரர்களும் 2 அணியி லு ம் இடம் பெற்று உள்ளனர். 

அனுபவம் வாய்ந்த வேகப் பந்து வீச் சாளரான உமர் குல்லிற்கு பதிலாக வேறு வீரருக்கு வாய்ப்பு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவரது பந்து வீச்சு திருப்தி அளிக்காததால் மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.  

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெ ஸ்ட் தொடரை இழந்ததால் ஒரு நாள் மற்றும் டி - 20 போட்டிகளுக்கு சமபல ம் வாய்ந்த அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றும் காசிம் தெரிவித்தார். 

ஒரு நாள் போட்டிக்கான அணி : -         மிஸ்பா உல் ஹக் (கேப்டன்), மொக மது ஹபீஸ், நசீர் ஜாம்ஷெட், யூனிஸ் கான், ஆசாத் சபீக், கம்ரன் அக்மல், சோயிப் மாலிக், உமர் அக்மல், சாகித் அப்ரிடி, சயீத் அஜ்மல், அப்துல் ரெஹ் மான் , ஜூனைத் கான், வகாப் ரியா ஸ், உமர் குல், மொகமது இர்பான் மற்றும் இம்ரான் பர்ஹட் ஆகியோர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago