முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரியில் ஜி-20 மாநாடு - கருத்தரங்கம் தொடங்கியது

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2023      இந்தியா
G-20 2023-01-16

Source: provided

புதுச்சேரி : புதுச்சேரியில் ஜி 20 மாநாடு பிரதிநிதிகள் கலந்தாய்வு கூட்டம் இந்திய தேசிய அறிவியல் அகாடமி தலைவர் அசுதோஷ் சர்மா தலைமையில் நேற்று தொடங்கியது.

ஜி-20 குழுவின் 18வது மாநாடு வருகிற செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது. இந்நிலையில் ஜி-20 மாநாடு நடைபெறுவதற்கு முன்னதாக அதன் துணை கூட்டங்கள் பல்வேறு நகரங்களில் நடக்கவுள்ளன.

அந்த வகையில் புதுச்சேரி மாநிலத்தில் ஜி-20 மாநாட்டின் ஆரம்பக்கட்ட கூட்டம் தொடங்கியுள்ளது. இந்தக்கூட்டம் நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்கி 6 மணிக்கு நிறைவடையும். இந்த மாநாட்டில் ஆஸ்திரேலியா, பிரேசில், சீனா, யூரோப் யூனியன், பிரான்ஸ் உள்ளிட்ட 11 நாடுகளை சேர்ந்த 15 வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இந்திய தேசிய அறிவியல் அககாடமியின் தலைவர் அசுதோஷ் சர்மா தலைமையில் இந்த மாநாடு நடைபெறுகிறது. நட்பு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

கடந்தாண்டு ஜி-20 மாநாடு நடத்திய இந்தோனேசியா, நடப்பு ஆண்டு தலைமை பொறுப்பேற்றுள்ள இந்தியா, அடுத்த ஆண்டு தலைமை பொறுப்பேற்கவுள்ள பிரேசில் நாடுகளின் தலைமை விஞ்ஞானிகள் உரையுடன் மாநாடு தொடங்கியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து