எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : துருக்கியில் நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் அங்கு பலி எண்ணிக்கை 5 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதனை அடுத்து மீட்புப் படை, நிவாரணப் பொருட்களுடன் மேலும் 2 விமானங்களை இந்தியா அனுப்புகிறது.
துருக்கி - சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை, முதலில் 7.8 ரிக்டர் அளவிலும், இரண்டாவதாக 7.5 ரிக்டர் அளவிலும், மூன்றாவது முறையாக 6.0 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் பதிவானது. இதில் கட்டிடங்கள் பல குலுங்கி, சரிந்து தரைமட்டமானது. இந்த இடிபாடுகளில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் தவித்து வருகின்றனர். ஆரம்பத்தில் 400 பேர் பலி என கூறி வந்த நிலையில், அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 4000 ஆனது.
இந்நிலையில், நேற்று காலை முதல் துருக்கியில் மீண்டும் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. முதலில் ரிக்டர் அளவில் 5.5 எனவும் இரண்டாவது முறையாக 5.7 எனவும் பதிவானது. இதனால், மக்கள் மேலும் பீதியில் உறைந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதில், இதுவரை 5000 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நிலநடுக்கத்தால், பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்ட வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு கணித்துள்ளது. இதற்கிடையே இந்திய விமானப் படையைச் சேர்ந்த மேலும் 2 விமானங்களில் மீட்புப் படையினரையும், நிவாரணப் பொருட்களையும் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு இந்தியா அனுப்புகிறது.
நிலநடுக்கம் குறித்த தகவல் அறிந்ததும், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் அளிக்க இந்தியா தயார் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அவரது அறிவிப்பை அடுத்து, இந்தியா சார்பில் இந்திய விமானப்படை விமானம் மூலம் 100 பேர் அடங்கிய மீட்புப் படையினர், மீட்புக்கான பொருட்கள், மோப்ப நாய்கள், மருத்துவக் குழுவினர், மருந்து பொருட்கள் துருக்கிக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
நேற்று முன்தினம் அதிகாலை 3.09-க்கு காசியாபாத்தில் இருந்து புறப்பட்ட இந்த விமானப்படை விமானம், துருக்கியின் அதானா விமான நிலையத்தை அடைந்துவிட்டதாக நேற்று நண்பகல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, மேலும் இரண்டு விமானப் படை விமானங்கள் மூலம் கூடுதல் மீட்புப் படையினர், 89 பேர் அடங்கிய மருத்துவக் குழு, நகரும் மருத்துவமனை, அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர்கள், எக்ஸ் ரே இயந்திரங்கள், வென்டிலேட்டர்கள், ஆக்சிஜன் உற்பத்தி நிலையம், இதயத்துடிப்பை கண்காணிக்கும் இயந்திரங்கள், 30 படுக்கைகள் உள்ளிட்டவை துருக்கிக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதேபோல், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிரியாவுக்கும் நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட உள்ளன. உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் ஆகியவை சிரியாவுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று தெரவிக்கப்பட்டுள்ளது. எனினும், மீட்புக்குழு மற்றும் மருத்துவக் குழுவை அனுப்பும் திட்டம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |