முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகாவில் நாளை மீண்டும் முழு அடைப்பு போராட்டம் : 2,000 அமைப்புகள் பங்கேற்பு என தகவல்

புதன்கிழமை, 27 செப்டம்பர் 2023      இந்தியா
Bangalore 2023-09-26

Source: provided

பெங்களூரு : தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் நாளை மீண்டும் முழு அடைப்பு போராட்டத்திற்கு கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. கன்னட சலுவளி கட்சியின் தலைவர் வட்டாள் நாகராஜ் தலைமையில் நடைபெறும் இந்த போராட்டத்திற்கு 2 ஆயிரம் அமைப்புகள் பங்கேற்க உள்ளன. 

சுப்ரீம் கோர்ட்டு தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து கர்நாடகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று முன்தினம் பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 

இந்நிலையில் கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு நாளை (29-ம் தேதி) கர்நாடக மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த போராட்டத்துக்கு கன்னட சலுவளி கட்சியின் தலைவர் வட்டாள் நாகராஜ் தலைமை தாங்குகிறார். 

இது குறித்து வட்டாள் நாகராஜ் கூறியதாவது:- நாங்கள் வருகிற 29-ம் தேதி கர்நாடகாவில் முழு அடைப்பு நடத்த முடிவு செய்துள்ளோம். அன்றைய தினம் பெங்களூருவில் கவர்னர் மாளிகையை முற்றுகையிடுவோம். பெங்களூரு முழு அடைப்பு வேண்டாம் என்று நாங்கள் கூறினோம். ஆனால் அதை நடத்தியவர்கள் ஏற்கவில்லை. 

பெங்களூரு மட்டுமே கர்நாடகம் இல்லை. எங்களின் குரல் டெல்லியில் உள்ள பிரதமருக்கு கேட்க வேண்டும். இந்த போராட்டத்தில் 2,000 அமைப்புகள் பங்கேற்கும். திரைத்துறை, உற்பத்தி துறை, ஓட்டல், போக்குவரத்து உட்பட அனைத்து துறையினர், விமான நிலைய ஊழியர்கள் பந்த்க்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். 

நேற்று முன்தினம் பெங்களூரில் இவ்வளவு பெரிய அளவில் போலீசார் குவிக்கப்பட்டதை நான் பார்த்ததில்லை. நாளை வெள்ளிக்கிழமை நடைபெறும் போராட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பந்த் நடத்துவார்கள். இவ்வாறு அவர் கூறினார். 

கர்நாடக முழு அடைப்பு காரணமாக, பெங்களூரு பல்கலைக் கழகம் வெள்ளிக்கிழமை நடத்த திட்டமிட்ட 58-வது ஆண்டு பட்டமளிப்பு விழாவை ஒத்திவைத்துள்ளது. புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது. நாளை நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்தையொட்டி மேட்டூர் அருகே உள்ள தமிழக-கர்நாடகா எல்லை நுழைவுவாயில், ஓசூர் அருகே உள்ள நுழைவு வாயில், ஈராடு மாவட்டம் தாளவாடி நுழைவுவாயில் வழியாக தமிழக பஸ்கள் மற்றும் கனரக, இலகு ரக வாகனங்கள் இயக்கப்படாது என தெரிகிறது. 

எனவே வாகனங்கள் அனைத்தும் தமிழக எல்லை பகுதி வரை மட்டுமே செல்லும். எல்லையில் உள்ள சோதனை சாவடியில் தமிழக போலீசார் தீவிர வாகன சோதனை, கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து