எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
கிருஷ்ணகிரி:இனி எந்த சூழ்நிலையிலும் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. உறுதியாக கூட்டணியில் இருக்காது. பாராளுமன்றத் தேர்தலில் மட்டுமல்ல, 2026-ல் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இருக்காது என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
கடந்த 25-ம் தேதி, அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், ஏற்கெனவே எங்களுடன் கூட்டணியில் இருந்த, பா.ஜ.க.வின் மாநிலத் தலைமை எங்கள் இயக்கத்தைப் பற்றியும், தலைவர்கள் பற்றியும் பல்வேறு விமர்சனங்கள் செய்த காரணத்தால், ஏற்கெனவே மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து விமர்சனம் செய்ததைக் கண்டித்து ஒரு கண்டனத் தீர்மானமே அ.தி.மு.க. சார்பில் நிறைவேற்றப்பட்டது.
அதைத் தொடர்ந்தும், பா.ஜ.க.வின் மாநிலத் தலைமை, பேரறிஞர் அண்ணா குறித்தும், கட்சியின் பொதுச் செயலாளர் குறித்தும் விமர்சனம் செய்தார். அந்த விமர்சனங்கள் அனைத்தும் உண்மைக்கு மாறான விமர்சனங்களாக இருந்ததால், தமிழகத்தில் உள்ள இரண்டு கோடி தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால், ஊடக விவாதங்களில், நேரம் வரும் போது அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்து விடும் என்று கூறி மக்களை திசைத்திருப்ப முயற்சித்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலினும், அமைச்சர் உதயநிதியும், அ.தி.மு.க. ஒரு நாடகம் நடத்திக் கொண்டிருப்பதாகவும், நேரம் வரும் போது பா.ஜ.க.வுடன் இணைந்து விடுவார்கள் என்றும் கூறி இருக்கின்றனர்.
அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து பா.ஜ.க.வை வெளியேற்றிய உடன் ஏற்பட்ட அச்சத்தின் காரணமாக அவர்கள் இதுபோல உளறி வருகின்றனர். அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து பா.ஜ.க.வை வெளியேற்றி ஏற்கெனவே அ.தி.மு.க. தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறி விட்டோம். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டணி அமைத்து 2024 நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்போம் என்று தெரிவித்தார்.
அ.தி.மு.க. கூட்டணி ஆதரிக்கும் பிரதமர் வேட்பாளர் யார்? என்ற நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், எங்களைப் பொறுத்தவரையில், தமிழக மக்கள்தான் எங்களுடைய எஜமானர்கள். தமிழக மக்கள்தான் எங்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். அம்மக்களின் உரிமைகள், நலனைக் காப்பதற்காகவும், தேவையான நிதியை பெறவும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம்.
எங்களைப் போலவே ஒடிசாவில் பிஜூ ஜனதா தளம் என்ற கட்சி இருக்கிறது. அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் யாரை முன்னிறுத்தி பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்கிறார். ஆந்திராவில் இருக்கும் இரண்டு கட்சிகள் யாரை பாராளுமன்றத் தேர்தலில் முன்னிறுத்துகின்றனர். இண்டியா கூட்டணி என்று சொல்கிறார்களே, இந்த கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யாரை முன்னிறுத்தி வாக்குகளை சேகரிக்கின்றனர். எனவே, தமிழக மக்களுடைய நலனில் அக்கறை கொண்டு, எங்கள் குரல் பாராமன்றத் தேர்தலில் ஒலிக்கும் என்று கூறினார்.
மேலும் பா.ஜ.க. தேசிய தலைவர்கள் அ.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை ஏதும் நடத்தினார்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்,
அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து பா.ஜ.க.வை வெளியேற்றி விட்டதாக ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றி விட்டோம். இனி எந்த சூழ்நிலையிலும் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. உறுதியாக கூட்டணியில் இருக்காது. பாராளுமன்றத் தேர்தலில் மட்டுமல்ல, 2026-ல் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இருக்காது என்பதை அ.தி.முக. சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஏற்கனவே 2014-ம் ஆண்டு காவிரியில் தண்ணீர் பெறுவது தொடர்பாக அ.தி.மு.க. எம்.பி.க்கள் 22 நாட்கள், பாராமன்றத்தை செயல்படாமல் முடக்கினோம். எனவே 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை தமிழக மக்களின் நலனை முன்னிறுத்தி சந்திப்போம்.
அ.தி.மு.க. கூட்டணியில் வலுவான கூட்டணி அமையும். இந்த கூட்டணியில் எந்த கட்சிகள் இணையும் என்பதை காலம்தான் முடிவு செய்யும். தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ளது. மேலும், 9 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியின் நிறை, குறைகள் குறித்து பேசுவோம் என்று அவர் கூறினார்.
பேட்டியின் போது, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கிருஷ்ணகிரி அசோக்குமார், ஊத்தங்கரை தமிழ்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மனோரஞ்சிதம் நாகராஜ், முனி வெங்கடப்பன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 1 week ago |
-
போப் லியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
09 May 2025புதுடில்லி, புனித போப் பதினான்காம் லியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பாகிஸ்தானுக்கு 3 நாடுகள் ஆதரவு: பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப்
09 May 2025இஸ்லாமாபாத் : பாகிஸ்தானுக்கு சீனா, துருக்கி, அஜர்பைஜான் தெளிவான ஆதரவை வழங்க முன்வந்துள்ளன என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.
-
ஜூன் 15ம் தேதி முதல் புதிய மினி பேருந்து திட்டம்
09 May 2025சென்னை : புதிய ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் ஜூன் 15ம் தேதி தொடங்கி வைக்க உள்ளார்.
-
தாக்குதல் முயற்சி முறியடிப்பு; பாதுகாப்பு படைகளுக்கு உமர் அப்துல்லா பாராட்டு
09 May 2025ஸ்ரீநகர், 'பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல் முயற்சிகள் நமது படைகளால் முறியடிக்கப்பட்டன' என ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்தார்.
-
இந்தியா பதிலடியில் பாக்., ராணுவ தளங்கள் சேதம்
09 May 2025புதுடில்லி, இந்தியா அளித்த பதிலடியில் பாகிஸ்தான் ராணுவ தளங்கள், முகாம்கள் சேதமடைந்துள்ளது தெரியவந்துள்ளது.
-
வீரர்களை அழைத்துவர சிறப்பு ரயில்
09 May 2025இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், தர்மசாலா திடலில் பஞ்சாப் கிங்ஸ் - டில்லி கேபிடல்ஸ் இடையிலான போட்டி வியாழக்கிழமை இரவு பாதியி
-
போர்ப் பதற்றம் எதிரொலி: பொதுமக்களுக்கு மத்திய அரசு அறிவுரை
09 May 2025புதுடில்லி, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில் மக்கள், ஆன்லைன் மற்றும் சமூக வலைதளங்களில் என்ன செய்யலாம்?
-
தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டின் 3 வகை அணிகளுக்கும் ஒரே பயிற்சியாளர் நியமனம்
09 May 2025கேப் டவுன் : தெ.ஆ. அணியின் டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 அணிகளுக்கும் ஒரே பயிற்சியாளரை நியமித்துள்ளது.
ஒரே பயிற்சியாளர்...
-
வேளாண் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூன் 8-ம் தேதி கடைசி நாள்
09 May 2025சென்னை : தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் வேளாண்மை படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு நேற்றுமுன்தினம் (மே 9) தொடங்கிய
-
மதவாத பிரச்சினையை ஏற்படுத்த முயற்சி: பாக். மீது மத்திய அரசு குற்றச்சாட்டு
09 May 2025புதுடெல்லி : மதவாத பிரச்சினையை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி செய்வதாக மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.
-
துவண்டு விட வேண்டாம்: பிளஸ்-2 மாணவர்களுக்கு முதல்வர் அறிவுரை
09 May 2025சென்னை : பிளஸ்-2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் துவண்டுவிட வேண்டாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.
-
மத்திய அரசின் கனவு தமிழகத்தில் என்றைக்கும் பலிக்காது: த.வெ.க.
09 May 2025சென்னை : தேசியக் கல்விக் கொள்கையைத் திணிக்கும் மத்திய அரசின் கனவு, தமிழகத்தில் என்றைக்கும் பலிக்காது என்று தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது.
-
பி.எஸ்.எல். போட்டிகள்: பாக். வேண்டுகோளை நிராகரிக்க ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முடிவு?
09 May 2025துபாய் : எஞ்சிய பி.எஸ்.எல். போட்டிகளை நடத்த பாகிஸ்தான் விடுத்த வேண்டுகோளை நிராகரிக்க ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
72-வது உலக அழகி போட்டி ஐதராபாத்தில் இன்று துவக்கம்?
09 May 2025ஐதராபாத் : உலகின் 72-வது அழகி போட்டி ஐதராபாத்தில் இன்று தொடங்க உள்ளது.
-
பாகிஸ்தானுக்கு நிதியுதவியா..? - ஐ.எம்.எப். அமைப்பிற்கு இந்தியா வைத்த கோரிக்கை
09 May 2025புதுடெல்லி : பாகிஸ்தான் கடனுக்கு ஐ.எம்.எப். அமைப்பிற்கு இந்திய வைத்த கோரிக்கை வைத்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 10-05-2025
10 May 2025 -
பொதுத் தேர்வு முடிவுகள்: நேரடி மறுகூட்டல் விண்ணப்பம் முறை ரத்து
09 May 2025சென்னை, 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளுக்குப் பின் நேரடியாக மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்கும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் பாறைகள் விழுந்ததால் ரயில் சேவை ரத்து
09 May 2025குன்னூர் : குன்னூர் மேட்டுப்பாளையம், இடையே இயக்கப்படும் மலை ரயில் பாதையில் பாறைகள் விழுந்ததால் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில்? - பி.சி.சி.ஐ. தீவிர ஆலோசனை
09 May 2025மும்பை : இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ஆக சுப்மன் கில்லுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக பி.சி.சி.ஐ. வட்டாரங்கள் தெரிவிகின்றன.
-
காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு: பயங்கரவாதிகள் 7 பேர் சுட்டுக்கொலை
09 May 2025ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீரின் சம்பா செக்டாரில் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நடந்த பெரிய ஊடுருவல் முயற்சியை எல்லை பாதுகாப்புப் படையினர் முறியடித்துள்ளனர்.
-
8 ஆயிரம் கணக்குகளை முடக்குங்கள்: எக்ஸ் தளத்திற்கு மத்திய அரசு உத்தரவு
09 May 2025டெல்லி : பாகிஸ்தான் மோதல் தொடர்பாக எக்ஸ் தளம் கணக்குகளை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
-
கங்கோத்ரி ஹெலிகாப்டர் விபத்தில் பைலட் உட்பட 6 பேர் உயிரிழப்பு
09 May 2025புதுடெல்லி, உத்தராகண்டில் யாத்ரீகர்களுடன் கங்கோத்ரிக்குச் சென்ற ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளானது.
-
மகளிர் முத்தரப்பு தொடர்: இலங்கையை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா
09 May 2025கொழும்பு : மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடரில் இலங்கையை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா ஆறுதல் வெற்றி பெற்றது.
முத்தரப்பு தொடர் ...
-
நாடு தான் முதன்மையானது : சி.எஸ்.கே.வின் பதிவு வைரல்
09 May 2025சென்னை : ஐ.பி.எல். போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், நாடு தான் முதன்மையானது என்ற சி.எஸ்.கே.வின் பதிவு வைரலாகியுள்ளது
-
நாடு முழுவதும் எரிபொருட்கள் போதுமான அளவு இருப்பு உள்ளது: நிறுவனங்கள் விளக்கம்
09 May 2025புதுடெல்லி, பெட்ரோல், டீசல், எல்.பி.ஜி.