முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போட்டியின்றி தேர்வு: மாநிலங்களவை எம்.பி. ஆனார் சோனியா காந்தி

செவ்வாய்க்கிழமை, 20 பெப்ரவரி 2024      இந்தியா
Sonia 2024-02-13

Source: provided

புதுடெல்லி : மாநிலங்களவை உறுப்பினராக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். 

5 முறை மக்களவை உறுப்பினராக பதவி வகித்த சோனியா காந்தி முதன்முறையாக மாநிலங்களவை எம்பியாக தேர்வாகியுள்ளார்.  தற்போது உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியின் எம்.பி.யாக உள்ள சோனியா காந்தி,  கடந்த 2019-ஆம் ஆண்டு தேர்தலின் போதே மக்களவைக்கு போட்டியிடும் கடைசி தேர்தல் என்று அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், கர்நாடகத்திலிருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  கடந்த வாரம் ராஜஸ்தானில் வேட்புமனுத் தாக்கல் செய்தார். வரும் பிப். 27-ஆம் தேதி 15 மாநிலங்களில் 56 மாநிலங்களவை இடங்களுக்கான தோ்தல் நடைபெற உள்ள நிலையில், சோனியா காந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக ராஜஸ்தான் சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது.

மேலும்,  வரும் மக்களவைத் தேர்தலில் சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து