முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

6 வருடங்களுக்கு பிறகு திருச்செந்தூரில் மீண்டும் தாராபிஷேகம் தொடக்கம்

புதன்கிழமை, 28 பெப்ரவரி 2024      ஆன்மிகம்
Tiruchendur 2024-02-14

Source: provided

திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கருவறையில் மூலவருக்கு வெப்பத்தை குறைக்கும் வகையில் தாராபிஷேகம் எனும் சிறப்பு பூஜை 6 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நேற்று முதல் தொடங்கியது.

அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினசரி காலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 10.30 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம் மற்றும் இரவு 7.15 மணிக்கு ராக்கால அபிஷேகம் என 3 வேளைகளில் அபிஷேகம் நடந்து வருகிறது.

மேலும் மூலவர் வெப்பத்தை குறைக்கும் வகையில், தாராபிஷேகம் உபயதாரர்கள் கட்டணம் செலுத்தி காலை 9 மணி முதல் 10.30 மணி வரை நடைபெற்று வந்தது. இதனை முன்னிட்டு கந்த சஷ்டி யாகசாலை மண்டபத்தில் தாரா ஹோமம் நடைபெறும். 

இதனையடுத்து மூலவருக்கு வெள்ளி கொப்பரை துவாரத்தின் வழியாக சுமார் 100 லிட்டர் பால் மூலம் தாராபிஷேகம் நடைபெறும். இந்த அபிஷேகங்களில் பக்தர்கள் கட்டண தரிசனத்திலும், இலவசமாக பொது தரிசனப்பாதையிலும் சுவாமி தரிசனம் செய்து வந்தனர். 

இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு இந்த தாராபிஷேகம் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கருவறையில் மூலவருக்கு வெப்பத்தை குறைக்கும் வகையில் தாராபிஷேகம் எனும் சிறப்பு பூஜை மீண்டும் நேற்று முதல் தொடங்கியது. 

இதனை முன்னிட்டு கந்த சஷ்டி யாகசாலை மண்டபத்தில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் கலந்து கொண்டு தாராபிஷேகத்தை தொடங்கி வைத்தார். 6 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தாராபிஷேகம் நடைபெறுவது பக்தர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து