எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, தமிழகத்தில் துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்காக, சட்டப்பேரவை இன்று கூடுகிறது. புதிய திட்டம் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கவர்னர் உரையுடன்...
சட்டப்பேரவையில் வழக்கமாக, பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, துறை வாரியாக மானிய கோரிக்கை மீது விவாதம் நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைகளின் திட்டங்களுக்கு, பேரவை ஒப்புதலுடன் நிதி விடுவிக்கப்படும். சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம், மழை உள்ளிட்டபல்வேறு காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டு, பிப்ரவரி 12-ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.
பார்லி. தேர்தல்...
கவர்னர் உரை மீதான விவாதம் 15-ம் தேதிவரை நடந்தது. அன்று, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு முதல்வர் ஸ்டாலின் தனது பதில் உரையை அளித்தார். அதைத் தொடர்ந்து, 19, 20-ம் தேதிகளில் தமிழக அரசின் பொது பட்ஜெட்,வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விவாதம் 22-ம் தேதி வரை நடைபெற்றது. தொடர்ந்து, துறைவாரியாக மானியகோரிக்கை மீதான விவாதம் நடத்தப்பட வேண்டிய நிலையில், பாராளுமன்ற மக்களவை தேர்தல் அறிவிப்பை எதிர்நோக்கி, மீண்டும் கூடும் தேதி அறிவிக்காமல் பேரவை தள்ளிவைக்கப்பட்டது.
மீண்டும் கூடுகிறது...
தேர்தல் நடைமுறைகள் முடிந்துள்ள நிலையில், மானிய கோரிக்கை விவாதங்களுக்காக சட்டப்பேரவை இன்று (ஜூன் 20) மீண்டும் கூடுகிறது. விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், காலை, மாலை என இரு வேளையும் பேரவை கூட்டம் நடக்கிறது. தமிழகத்தின் 39 பாராளுமன்ற மக்களவை தொகுதிகளையும் வெற்றி பெற்ற உத்வேகத்தில் ஆளும் தி.மு.க. உள்ளது. இதனால், பல்வேறு மக்கள் நலத்திட்டங்களின் விரிவாக்கம், புதிய திட்டம் தொடர்பான அறிவிப்புகள் இடம்பெறும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
முதல் நாளில்...
தமிழக சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. வருகிற 29ம் தேதி வரை நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தில், மானிய கோரிக்கைகள் குறித்து விவாதம் நடத்தப்படுகிறது. முதல் நாளான இன்று, கூட்டத்தில், மறைந்த விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்தி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி பேரவை கூட்டம் ஒத்தி வைக்கப்படும். அதைத்தொடர்ந்து நாளை (21ம் தேதி - வெள்ளி) காலை 10 மணிக்கு சட்டப்பேரவை மீண்டும் கூடும்.
8 நாட்கள் மட்டும்...
இதை அடுத்து நாளை காலை 10 மணிக்கு தொடங்கும் சட்டசபை நிகழ்வுகளை காலை 9.30 மணிக்கு தொடங்குவது தொடர்பாக விதிகள் குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வரும் 21ம் தேதி சட்டப்பேரவை கூடியதும் விதிகள் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும். அதன் பிறகு மானியக்கோரிக்கை மசோதா மீதான விவாதம் 8 நாட்கள் மட்டும் நடத்தப்படுகிறது.
முக்கிய அறிவிப்புகள்...
மானியக்கோரிக்கை மசோதா மீதான விவாதத்தில், கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின்கீழ் பயனாளிகள் விரிவாக்கம் உள்ளிட்டவற்றுக்கான அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிகிறது. ஜூலை 1 முதல் மின்கட்டணம் உயர்த்தப்படலாம் என தகவல் பரவி வரும்சூழலில், அதுபற்றிய முக்கிய அறிவிப்புகளும் வெளியாகும் என தெரிகிறது. அதேநேரம், மின்கட்டணம், போதைப் பொருள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தரப்பு வலியுறுத்தும் என தெரிகிறது.
எந்தெந்த துறைகள் மீது விவாதம்:
- 21ம் தேதி - - காலை - நீர்வளத்துறை, தொழிலாளர் நலன் ஆகிய துறை.
- 21ம் தேதி - - மாலை - வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை,
- மதுவிலக்கு, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, சமூக நலன்-மகளிர் உரிமைத்துறை.
- 22ம் தேதி - காலை - உள்ளாட்சி துறை, மாலை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை,
- கால்நடை பராமரிப்பு, மீன்வளம், பால்வளம்.
- 23ம் தேதி - ஞாயிறு - அரசு விடுமுறை.
- 24ம் தேதி - காலை - உயர் கல்வி துறை, வருவாய் துறை, பள்ளி கல்வி துறை,
- 24ம் தேதி - மாலை - நீதி நிர்வாகம், சட்டத்துறை, செய்தி மற்றும்
- விளம்பரம், தமிழ் வளர்ச்சி துறை
- 25ம் தேதி - காலை - நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை,
- பொதுப்பணித்துறை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், வனத்துறை.
- 25ம் தேதி - மாலை - பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
- சிறுபான்மையினர் நலத்துறை, கைத்தறி, போக்குவரத்து துறை,
- ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை,
- 26ம் தேதி - காலை - திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, பொதுத்துறை,
- 26ம் தேதி - மாலை - சுற்றுலா துறை, வணிகவரிகள், முத்திரைத்தாள்கள் மற்றும்
- பத்திரப்பதிவு துறை, இந்து சமய அறநிலைய துறை,
- 27ம் தேதி - காலை - இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை,
- சிறப்பு திட்ட செயலாக்க துறை, கைத்தறி மற்றும் துணிநூல்.
- 27ம் தேதி - மாலை - கூட்டுறவு துறை, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை
- 28ம் தேதி - காலை - குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை,
- சுகாதார துறை, தகவல் தொழில்நுட்பவியல், தொழில் துறை.
- 28ம் தேதி - மாலை காவல், தீயணைப்பு.
- 29ம் தேதி - காவல், தீயணைப்பு துறை மீதான விவாதத்துக்கு
- முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரை அளிப்பார்.
- 29ம் தேதி - அரசினர் சட்டமுன்வடிவுகள் ஆய்வு செய்து நிறைவேற்றப்படும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
தர்மஸ்தலா கோவில் விவகாரம்: சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்தது கர்நாடக அரசு
20 Jul 2025மங்களூரு : தர்மஸ்தலா கோவில் விவகாரத்தில் கர்நாடக அரசு 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நேற்று (ஜூலை 20) அமைத்து உத்தரவிட்டுள்ளது.
-
பயங்கரவாதி மசூத் அசார் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதுங்கியிருப்பது கண்டுபிடிப்பு
20 Jul 2025புதுடில்லி : பயங்கரவாதி மசூத் அசார் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
-
கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு குறித்து தேசிய கருத்தரங்குகள்: தங்கம் தென்னரசு
20 Jul 2025மதுரை : தமிழ்நாட்டில் கல்வெட்டுகளை கண்டுபிடிப்பதில் நாம் அடைந்திருக்கும் உயரம் குறித்து அனைவருக்கும் தெரியும் வகையில் தேசிய கருத்தரங்கள் நடத்தப்படும் என அமை
-
அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் ரஷ்யாவுக்கு சுனாமி எச்சரிக்கை
20 Jul 2025மாஸ்கோ : ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ரஷ்யாவின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரி
-
ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டாம்: கேரளா ஐகோர்ட் உத்தரவு
20 Jul 2025திருவனந்தபுரம் : நீதிமன்ற உத்தரவுகளை மொழிபெயர்த்து தர, ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தக்கூடாது என கேரளா ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
திருச்செந்தூர் கோவிலில் 7 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
20 Jul 2025திருச்செந்தூர் : ஆடி கிருத்திகையையொட்டி திருச்செந்தூர் கோவிலில் 7 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
-
தமிழ்நாட்டின் மானம் காக்க களம் புகுவோம்: உதயநிதி ஸ்டாலின்
20 Jul 2025சென்னை : தமிழ்நாட்டின் மானம் காக்க களம் புகுவோம் - பாசிசத்தை நொறுக்குவோம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
-
பார்லி., கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் மத்திய அரசு ஆலோசனை
20 Jul 2025புதுடெல்லி : பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், நேற்று மத்திய அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவ
-
ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல : எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
20 Jul 2025திருத்துறைப்பூண்டி : ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
சட்டமன்றக் கூட்டத்தில் செல்போனில் ரம்மி விளையாடிய மகாராஷ்டிர விவசாயத்துறை அமைச்சர்
20 Jul 2025மும்பை : மகாராஷ்டிர மாநில விவசாயத்துறை அமைச்சர் மாணிக்ராவ் கோக்டே, சட்டமன்ற கூட்டத்தொடரின் போது செல்போனில் ரம்மி விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
-
மீண்டும் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித் குமாரின் கார்
20 Jul 2025ரோம் : ஜிடி 4 கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் ஓட்டிச்சென்ற கார் மீண்டும் விபத்தில் சிக்கியது.
-
2 நாட்கள் பயணமாக நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை, திருப்பூர் பயணம்
20 Jul 2025சென்னை : பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வரும் 22, 23-ம் தேதிகளில் 2 நாட்கள் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திடீரென ஒத்திவைப்பு
20 Jul 2025சென்னை : சென்னையில் நேற்று நடைபெறுவதாக இருந்த த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
மதுரை ஆதினத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை
20 Jul 2025மதுரை : கார் ஏற்றிக் கொல்ல சதி என கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக, படுத்த படுகையில் இருக்கும் மதுரை ஆதினத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.
-
இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்க முக்கிய முடிவை எடுத்த முகமது ஷமி
20 Jul 2025மும்பை : இந்திய அணியில் வாய்ப்பை இழந்த முகமது ஷமி மீண்டும் கம்பேக் கொடுக்க, உள்ளூர் போட்டிகளில் விளையாடி இழந்த பார்மை மீட்டெடுக்க முடிவு செய்துள்ளார்.
-
ஒருநாள் கிரிக்கெட் தொடர் சமன்: 2-வது போட்டியில் இங்கி., வெற்றி
20 Jul 2025லண்டன் : இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரை சமன் செய்துள்ளது.
-
நீலகிரி, தென்காசி, தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
20 Jul 2025சென்னை : தமிழகத்தில் இன்று நீலகிரி,தென்காசி, தேனி கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நடப்பாண்டில் 3-வது முறை நிரம்பியது மேட்டூர் அணை
20 Jul 2025மேட்டூர் : மேட்டர் அணை நடப்பாண்டில் 3வது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை நேற்று காலை 8 மணிக்கு எட்டியது.
-
பிரக்ஞானந்தாவிடம் கார்ல்சன் தோல்வி
20 Jul 2025உலகின் நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சனை தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தா மீண்டும் வீழ்த்தினார்.
-
3 முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் பதிலளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
20 Jul 2025புதுடெல்லி : வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின்போது மூன்று முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்துக்கு வந்து பதில் அளிக்க வேண்டும் என்ற
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் இ.பி.எஸ். படுதோல்வி அடைவார் : அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
20 Jul 2025சென்னை : 2026 சட்டசபை தேர்தலிலும் இ.பி.எஸ். படுதோல்வி அடைவார் என்று நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
-
விவசாயிகளுக்கு ரூ.53 ஆயிரம் கோடி பயிர்க் கடன்; மகளிர் சுயஉதவிக்குழுவுக்கு 10,997 கோடி ரூபாய் கடன் : தமிழ்நாடு அரசு பெருமிதம்
20 Jul 2025சென்னை : பயிர்க் கடன்களை உரிய கெடு தேதிக்குள் திரும்பச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியில்லாப் பயிர்கடன்களாக 66,24,955 விவசாயிகளுக்கு ரூ.53,340.60 கோடி வழங்கப்பட்டுள்ள
-
கிருஷ்ணகிரி அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி
20 Jul 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் பலியாகினர்.
-
விமான விபத்து பற்றி உள்நோக்கத்துடன் செய்தி : மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு
20 Jul 2025புதுடில்லி : ஏர் இந்தியா விமான விபத்து பற்றி மேற்கத்திய ஊடகங்கள் உள்நோக்கத்துடன் செய்தி வெளியிடுவதாக, மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவ
-
'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை பற்றி பாராளுமன்றத்தில் பேச மத்திய அரசு தயார்: அமைச்சர் கிரண் ரிஜிஜூ உறுதி
20 Jul 2025புதுடில்லி : ஆபரேஷன் சிந்தூர் பற்றி பாராளுமன்றத்தில் மத்திய அரசு பேச தயாராக உள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறி உள்ளார்.