முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விம்பிள்டன் மகளிர் டென்னிஸ்: கிரெஜ்சிகோவா 'சாம்பியன்'

ஞாயிற்றுக்கிழமை, 14 ஜூலை 2024      விளையாட்டு
Woman Kercat 2024-06-28

Source: provided

லண்டன் : விம்பிள்டன் மகளிர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் பாவ்லினியை தோற்கடித்து முதல்முறையாக கிரெஜ்சிகோவா விம்பிள்டன் பட்டத்தை வென்றார்.

பெண்கள் ஒற்றையர்... 

'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் ஜாஸ்மின் பாவ்லினி (இத்தாலி), 32-ம் நிலை வீராங்கனையான பார்போரா கிரெஜ்சிகோவாவை (செக்குடியரசு) எதிர்கொண்டார்.  

பாவ்லினி பதிலடி...

1 மணி 56 நிமிடம் நடந்த இந்த விறுவிறுப்பான ஆட்டத்தில் கிரெஜ்சிகோவா முதல் செட்டை கைப்பற்றி அசத்தினார். அடுத்த செட்டை பாவ்லினி வசப்படுத்தி பதிலடி கொடுத்தார். இதனால் ஆட்டம் 3-வது மற்றும் கடைசி செட்டுக்கு நகர்ந்தது. கடைசி செட்டையும் கிரெஜ்சிகோவா கைப்பற்றினார். முடிவில் கிரெஜ்சிகோவா 6-2, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் பாவ்லினியை தோற்கடித்து முதல்முறையாக விம்பிள்டன் பட்டத்தை வென்றார்.

ரூ.29.25 கோடி பரிசு...

கிராண்ட்ஸ்லாம் போட்டியில் அவர் வென்ற 2-வது பட்டம் இதுவாகும். அவர் ஏற்கனவே 2021-ம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்று இருந்தார். முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை முத்தமிட பாவ்லினி எடுத்த முயற்சி 2-வது முறையாக கைகூடாமல் போனது. அவர் இந்த ஆண்டு பிரெஞ்சு ஓபன் இறுதிப்போட்டியிலும் தோற்று இருந்தார். சாம்பியன் பட்டத்தை வென்ற கிரெஜ்சிகோவா ரூ.29.25 கோடியை பரிசாக அள்ளினார். 2-வது இடம் பிடித்த பாவ்லினிக்கு ரூ.15 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து