Idhayam Matrimony

வங்கதேசத்திற்கு விமான சேவை துவக்கம்: தாயகம் திரும்பிய இந்தியர்கள் 400 பேர்

புதன்கிழமை, 7 ஆகஸ்ட் 2024      இந்தியா
Bangladesh-1 2024 08 07

Source: provided

புதுடெல்லி : வங்கதேசத்திற்கு விமான சேவை நேற்று முதல் துவங்கிய நிலையில் சிறப்பு விமானங்கள் மூலம் 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

வங்கதேசத்தில், இட ஒதுக்கீடு விவகாரத்தில் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், பிரதமர் ஷேக் ஹசீனா பதவியில் இருந்து விலகி நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இதையடுத்து வங்கதேசத்தில் உச்சகட்ட பதற்றம் நீடித்து வருகிறது. 

இதற்கிடையே, டெல்லியில் இருந்து டாக்காவிற்கு விமான சேவைகள் நேற்று முன்தினம் ரத்து செய்யப்பட்டது. அதன்படி, இண்டிகோ, விஸ்தாரா நிறுவனங்கள் வங்காளதேச தலைநகருக்கான அனைத்து விமானங்களையும் நேற்று முன்தினம் ரத்து செய்தன. அதே போல ஏர் இந்தியா நிறுவனமும் டாக்காவிற்கு செல்ல இருந்த காலை விமானத்தை ரத்து செய்தது. ஆனால் மாலை விமானத்தை ஏர் இந்தியா நிறுவனம் டாக்காவிற்கு இயக்கியது.

இந்த நிலையில், வங்கதேசத்தில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். வங்காள தேச தலைநகர் டாக்காவில் இருந்து 6 குழந்தைகள் உள்பட 205 இந்தியர்கள் ஏர் இந்தியாவின் சிறப்பு விமானங்கள் மூலம் நேற்று காலை டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். 

இதேபோல், இண்டிகோ சிறப்பு விமானம் ஒன்று டாக்காவில் இருந்து 200-க்கும் மேற்பட்ட இந்தியர்களை கொல்கத்தாவுக்கு அழைத்து வந்துள்ளது. 

இந்தியாவில் இருந்து டாக்காவிற்கு மீண்டும் விமான சேவைகளை தொடங்க விமான நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளது. அதன்படி, இண்டிகோ டெல்லி, மும்பை மற்றும் சென்னையில் இருந்து டாக்காவிற்கு தினசரி ஒரு விமானத்தையும், கொல்கத்தாவில் இருந்து தினசரி இரண்டு விமானத்தையும் நேற்று இயக்கியது.  

அதேபோல விஸ்தாரா மும்பையிலிருந்து தினசரி விமானங்களையும், டெல்லியிலிருந்து டாக்காவிற்கு வாராந்திர மூன்று சேவைகளையும் இயக்குகிறது. இதே போல ஏர் இந்தியாவும் தனது சேவைகளை நேற்று முதல் தொடங்கியது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து