முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை: அதிகாலையில் ஏற்பட்ட துயரம்: விடுதியில் பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து - 2 பெண்கள் பலி

வியாழக்கிழமை, 12 செப்டம்பர் 2024      தமிழகம்
Fire

மதுரை, மதுரையில் பெண்கள் விடுதி ஒன்றில் அதிகாலையில் பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து  ஏற்பட்டதில் 2 பெண்கள் உயிரிழந்த சோகம் சம்பவம் அரங்கேறியுள்ளது. இதைஅடுத்து விடுதி உரிமையாளர் கைது செய்யப்பட்டார். 

மதுரையில் உள்ள பெண்கள் தங்கும் விடுதியில் வியாழக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். மேலும், மூன்று பெண்கள் பலத்த தீ காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே கட்ராபாளையம் பகுதியில் பெண்கள் தங்கும் விடுதியில் வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விடுதியில் 40-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கியிருந்த நிலையில், பரிமளா (வயது 50) என்ற பெண்ணும் சரண்யா (வயது 22) என்ற மாணவியும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், மூன்று பெண்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்து காரணமாக ஏற்பட்ட புகை மூட்டத்தால், விடுதிகளில் தங்கியிருந்த பல பெண்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்து ஏற்பட்ட பெண்கள் விடுதிக்கு சென்ற மதுரை வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி, ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதல்கட்ட விசாரணையில், விடுதியில் இருந்த குளிர்சாதனப் பெட்டி வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

விபத்து நடந்த இடத்தை கலெக்டர் சங்கீதா ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், "மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி உள்ள பழமை வாய்ந்த கட்டிடங்களை இடிப்பதற்கு மாநகராட்சி சார்பில் முறையாக நோட்டீஸ் வழங்கியும் அவர்கள் இடிக்காமல் இருக்கிறார்கள். நீதிமன்றத்தையும் சில பேர் அணுகி உள்ளனர். இடிக்காமல் இருக்கும் பழமை வாய்ந்த கட்டிடங்கள் ஆலோசித்து 'சீல்' வைக்கப்படும் என்றும் தெரிவித்தார். அதேபோல் மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமாரும், பார்வையிட்டு ஆய்வு செய்தார். முறையான மாநகராட்சி அனுமதி, சுகாதாரத் துறை அனுமதி, தீயணைப்புத்துறையின் தடையில்லா சான்று, காவல்துறையின் அனுமதி என்று எந்தவிதமான அனுமதியும் பெறாமல் இந்த விடுதி செயல்பட்டு வந்துள்ளது. விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.

இந்நிலையில் தீ விபத்து ஏற்பட்டு 2 பெண்கள் பலியான நிலையில் பெண்கள் தங்கும் விடுதியை இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விடுதி செயல்பட்டு வந்த கட்டிட உரிமையாளருக்கு மீண்டும் ஒரு நோட்டீஸ் வழங்க உள்ளதாகவும் மதுரை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து