எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் ஊடகங்களில் விளம்பரம் செய்வதற்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டுள்ளது.
பத்திரிக்கை, தொலைக்காட்சி, ஊடகங்களில் மருத்துவர்கள், மருத்துவமனைகள் தொடர்பான விளம்பரங்களை முறைப்படுத்த கோரி மங்கையர்கரசி என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், மருத்துவர்கள், மருத்துவமனை சார்ந்த விளம்பரங்கள், பொதுமக்களை தவறாக வழிநடத்துகின்றன என குறிப்பிட்டிருந்தார். மேலும் மருத்துவ சிகிச்சைகள் தொடர்பாக மிகைப்படுத்தப்பட்ட, போலியான விளம்பரங்களை கொடுத்து மக்களை நம்பவைப்பதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.
போலி மருத்துவர்கள், போலி மருந்துகள், மற்றும் மருத்துவ சிகிச்சை முறைகள் மற்றும் மருத்துவமனைகளை ஊக்கப்படுத்தும் வகையிலான விளம்பரங்களை வெளியிட ஊடகங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஸ்ரீராம், செந்தில் குமார் ராமமூர்த்தி அமர்வு, மருத்துவர்கள், மருத்துவமனை சார்ந்த ஒவ்வொரு விளம்பரங்களையும் ஊடகங்கள் சரிபார்த்து வெளியிட வேண்டும் என எதிர்பார்க்க முடியாது என தெரிவித்தனர்.
விதிகளை மீறி செயல்படும் மருத்துவர்கள், மருத்துவமனைகள் மீது மருத்துவ ஆணையம் நடவடிக்கை எடுக்க முடியும். மனுதாரர் இது சம்பந்தமாக மருத்துவ ஆணையத்திடம் புகார் அளிக்கலாம் என தெரிவித்த நீதிபதிகள், போலியான மருத்துவமனைகள், மருத்துவர்கள் விளம்பரங்களை வெளியிட்டால் அது தொடர்பாக காவல் துறையிடம் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |