முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லாஸ் ஏஞ்சலீஸ் காட்டுத்தீயில் ரூ.10,770 கோடி பங்களா நாசம்

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜனவரி 2025      உலகம்
Los-Angeles-wildfire-2025-0

லாஸ் ஏஞ்சல்ஸ், லாஸ் ஏஞ்சலீஸ் காட்டுத் தீயில் ரூ.10,770 கோடி மதிப்பிலான சொகுசு பங்களா ஒன்று முழுமையாக எரிந்து சாம்பலானது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயில் ரூ.10,770 கோடி மதிப்பிலான சொகுசு பங்களா ஒன்று முழுமையாக எரிந்து சாம்பலானது. லாஸ் ஏஞ்சலீஸின் ஹாலிவுட் பகுதியில் முன்னணி திரைப்பட நிறுவனங்கள் மற்றும் திரைப்பட நகரங்கள் அமைந்துள்ளன. ஜனவரி 7-ஆம் தேதி லாஸ் ஏஞ்சலீஸின் பாலிசேட்ஸ் பகுதியில் திடீரென காட்டுத் தீ பரவியது. 6 நாள்களாக பற்றி எரியும் காட்டுத் தீயில் சிக்கி இதுவரை 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

வனப்பகுதியில் ஏற்பட்ட இந்தத் தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இந்த நிலையில் உலகின் மிகவும் அதிநவீன சொகுசு மாளிகையான பசிபிக் பாலிசேட்ஸில் உள்ள மிகவும் விலையுயர்ந்த சொகுசு பங்களாவும் எரிந்து நாசமானது. லூமினார் டெக்னாலஜியின் தலைமைச் செயல் அதிகாரி ஆஸ்டின் ரஸ்ஸலுக்குச் சொந்தமான 125 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.10,770 கோடி) மதிப்புள்ள, 18 படுக்கையறைகள் கொண்ட இந்த மாளிகை தீக்கிரையாகியிருக்கும் புகைப்படங்களும் விடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாளிகை வீடு மாதத்திற்கு .4,50,000 டாலர்களுக்கு (தோராயமாக ரூ.3.74 கோடி) வாடகைக்கு விடப்பட்டு வந்தது. 2023 ஆம் ஆண்டில் வெளியான எச்பிஓவின் சக்ஸ்ஸென் சீசன்- 4 இல் இந்த சொகுசு பங்களா மிகவும் புகழ் பெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து