முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவள்ளூர், பொன்னேரியில் 2 லட்சம் பேருக்கு ரூ. 357.43 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2025      தமிழகம்
CM-3-2025-04-18

திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த ஆண்டார்குப்பத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில்,பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.418.15 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். ரூ.390.74 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினர். மேலும், ரூ.357.43 கோடி மதிப்பில் 2 லட்சத்து 2 ஆயிரத்து 531 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.

பின்னர் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- பல்வேறு திட்டங்களை திராவிட மாடல் ஆட்சியில் வழங்கி வருகிறோம். 10 ஆண்டுகால அ.தி.மு.க. இருண்ட ஆட்சியில் முடங்கிக்கிடந்த உட்கட்டமைப்பு பணிகள் கடந்த 4 ஆண்டுகளாக சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது.  இந்த விழாவில் 63 ஆயிரத்து 124 பேருக்கு பட்டா வழங்கப்படுகிறது. இதுதான் எனக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம். அரசின் அக்கறையான நிர்வாகத்தால் அனைத்து துறையிலும் மாநிலம் வளர்ச்சியடைந்துள்ளது.

நாட்டிற்கே முன்னோடியாக பல்வேறு திட்டங்களை திராவிட மாடல் அரசு செய்து வருகிறது. தி.மு.க. ஆட்சியில் தன்னம்பிக்கையும் வளர்ந்துள்ளது, தமிழ்நாடும் வளர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் பொறுப்பான எதிர்க்கட்சியாக செயல்படாலம் தமிழ்நாட்டிற்கே எதிரிக்கட்சிகளாக செயல்படுகின்றன. தமிழகத்திற்கும் , தமிழக மக்களுக்கும் எதிரானவர்களோடு உறவாடி தமிழ்நாட்டை அடகுவைக்கும் எண்ணத்தை கொண்டுள்ளனர். நீட் தேர்வு எதிர்ப்பு, மும்மொழி திட்டம் நிராகரிப்பு, வக்பு திருத்தச்சட்ட எதிர்ப்பு, தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படும் மாநிலங்களை ஒன்றுதிரட்டுதல் போன்றவற்றில் நாம்தான் இந்திய அளவில் வலுவாக குரல் கொடுத்து வருகிறோம். மாநில உரிமைகளின் அகில இந்திய முகமாக தி.மு.க. உள்ளது.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்துதான் தமிழகம் போராடுகிறது. மாநிலங்களின் உரிமைகளை கேட்பது தவறா? கவர்னருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு சென்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பெற்றோம். இதுதான் தி.மு.க.வின் சக்தி. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து