முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி: 2-வது நாளாக குவிந்த சுற்றுலாப் பயணிகள்

ஞாயிற்றுக்கிழமை, 4 மே 2025      தமிழகம்
Yercaud 2024-08-25

Source: provided

கோத்தகிரி : கோத்தகிரியில் நடந்த காய்கறி கண்காட்சியை காண 2-வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். 

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல்- மே ஆகிய 2 மாதங்கள் கோடை சீசன் ஆகும். அப்போது இங்கு நிலவும் இதமான காலநிலையை அனுபவிப்பதற்காக  லட்சக்கணக்காக சுற்றுலாப் பயணிகள் நீலகிரிக்கு படையெடுப்பது வழக்கம்.

அப்படி வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விப்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டுக்கான கோடை விழா கோத்தகிரி நேரு பூங்காவில் 13-வது காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. இதனை மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

கோத்தகிரி காய்கறி கண்காட்சியில் தமிழர் பண்பாட்டை போற்றும் விதமாக கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, முள்ளங்கி, கேரட் உள்பட 2 ½ டன் காய்கறிகளை கொண்டு வாடிவாசலில் இருந்து சீறி பாயும் காளை உள்பட பல்வேறு அலங்காரங்கள் தத்ரூபமாக அமைக்கப்பட்டு உள்ளன.  இதை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.

இந்த நிலையில் 2-வது நாளாக நேற்றும் கோத்தகிரி பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இங்கு இடம்பெற்று உள்ள உருளைக்கிழங்கால் ஆன சிலம்பாட்டம், கேரட், பீட்ரூட்டால் ஆன தமிழ் மறவன், பட்காய் மூலம் உருவான மரகத ப்புறா, பச்சை-சிவப்பு மிளகாய்களால் ஆன பச்சைக்கிளி,   போன்ற அலங்காரங்கள் ஆகியவை சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அமைந்து இருந்தது. மேலும் கோத்தகிரி கண்காட்சியில் இடம் பெற்று உள்ள காய்கறி அலங்காரங்கள் அச்சு அசப்பில் நிஜ விலங்குகள், பறவைகள் போல காட்சி அளித்தன.

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து