முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைன் ராணுவம் ட்ரோன் தாக்குதல்: 40 ரஷ்யா போர் விமானங்கள் அழிப்பு

திங்கட்கிழமை, 2 ஜூன் 2025      உலகம்
Drone 2023 06 12

Source: provided

கீவ் : உக்ரைன் ராணுவத்தின் ட்ரோன் தாக்குதலில் ரஷ்யாவின் 40 போர் விமானங்கள் அழிக்கப்பட்டது.

கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் ரஷ்யாவின் பெலயா, ஒலன்யா, டியாகிலெவா, இவாநோயா ஆகிய 4 விமானப்படை தளங்கள் மீது உக்ரைன் ராணுவம் ட்ரோன்கள் மூலம் நேற்றுமுன்தினம் தாக்குதல் நடத்தியது.

ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் ரஷ்ய விமான படைத் தளங்கள் மீது குண்டுமழை பொழிந்தன.இதில் 4 விமானப்படை தளங்களிலும் 40-க்கும் மேற்பட்ட ரஷ்ய போர் விமானங்கள் தீயில் எரிந்து அழிந்தன. இதுகுறித்து உக்ரைன் ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது:- ரஷ்ய ராணுவம் நாள்தோறும் போர் விமானங்கள், ட்ரோன்கள் மூலம் உக்ரைன் குடியிருப்பு பகுதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக ரஷ்யாவின் 4 விமானப்படை தளங்கள் மீது ட்ரோன்கள் மூலம் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தினோம். இதில் பெலயா விமானப்படை தளம் உக்கரைனில் இருந்து 4,700 கி.மீ. தொலைவிலும், ஒலன்யா தளம் 2,000 கி.மீ. தொலைவிலும் உள்ளன. எங்களது தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட ரஷ்ய போர் விமானங்கள் அழிக்கப்பட்டு உள்ளன. ஒட்டுமொத்தமாக ரஷ்யாவுக்கு ரூ.17,000 கோடி (2 பில்லியன் டாலர்) இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

ரஷ்யாவின் எல்லைப் பகுதிக்குள் சரக்கு லாரிகளில் ட்ரோன்களை கடத்திச் சென்றோம். அந்த லாரிகளில் இருந்து எப்பிவி ரக ட்ரோன்கள் பறந்து ரஷ்ய விமானப்படை தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. எங்களுடைய புதிய ட்ரோன்கள் 3,000 கி.மீ. தொலைவு வரை தொடர்ந்து பறக்கும் திறன் கொண்டது. இவ்வாறு உக்ரைன் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து