முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோப்பையை வெல்லப்போவது யார்? - ஐ.பி.எல். இறுதி ஆட்டத்தில் இன்று பெங்களூரு-பஞ்சாப் அணிகள் மோதல்

திங்கட்கிழமை, 2 ஜூன் 2025      விளையாட்டு
IPL 2023 08 02

Source: provided

அகமதாபாத் : ஐ.பி.எல். 2025 தொடரின் இறுதி ஆட்டத்துக்கு பஞ்சாப் கிங்ஸ் தகுதி பெற்றுள்ளது.  அகமதாபாதில் நடைபெற்ற 2-வது குவாலிபயா்  ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்.

ஆட்டம் தாமதம்...

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அகமதாபாதில் மழை பெய்ததால் 1 மணி நேரத்துக்கும் மேல் தாமதமாகவே ஆட்டம் தொடங்கியது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய மும்பை இண்டியன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது.

பஞ்சாப் வெற்றி...

இதனையடுத்து, 204 ரன்கள் என்ற கடின இலக்கை எட்ட பஞ்சாப் கிங்ஸ் அணியினர் கடுமையாகப் போராடினர். இதனால், அந்த அணியின் வெற்றிக்கு கடைசி 2 ஓவர்களில் 23 ரன்கள் தேவைப்பட்டது. இறுதி வரை ஆட்டமிழக்காமல் மட்டையை சுழற்றிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் சிக்ஸர் மழை பொழிந்தார். அவர் 41 பந்துகளில் 8 சிக்ஸர், 5 பௌண்டரிகளுடன் 87 ரன்கள் (ஸ்ட்ரைக் ரேட் - 212) குவித்தார். இதனால் அந்த அணியால் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் திரட்ட முடிந்தது. இதன்மூலம், பஞ்சாப் கிங்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியடைந்ததுடன் முதல்முறையாக ஐ.பி.எல். கோப்பையை வெல்லும் வாய்ப்பையும் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

பெங்களூரு அணியை...

இதன்மூலம், ஏற்கெனவே 5 முறை சாம்பியனான மும்பை இண்டியன்ஸ் அணி, 6-ஆவது முறையாக ஐ.பி.எல். சாம்பியனாகும் வாய்ப்பை நழுவ விட்டது. முதல்முறையாக ஐ.பி.எல். கோப்பையை வெல்லும் முனைப்புடன், இன்று (ஜூன் 3) அகமதாபாதில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது பஞ்சாப் கிங்ஸ்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து