முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரோகித்-கோலி கலந்த கலவை சுப்மன் கில்: பட்லர் பாராட்டு

செவ்வாய்க்கிழமை, 17 ஜூன் 2025      விளையாட்டு
Suban-Gill 2025-06-17

Source: provided

லண்டன் : ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் கலந்த கலவையாக சுப்மன் கில் உள்ளார் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜோஸ் பட்லர் பேசியுள்ளார்.

சுப்மன் கில் கேப்டன்...

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி இங்கிலாந்து சென்றடைந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸ் திடலில் வருகிற ஜூன் 20 ஆம் தேதி தொடங்குகிறது. இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி அண்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றனர். இதனையடுத்து, டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டார். 

இங்கிலாந்தில்...

அவரது தலைமையிலான இளம் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்த்து விளையாடவுள்ளது. இந்திய அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சுப்மன் கில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் குணங்கள் கொண்டவராக உள்ளார் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.

கலவையாக...

 இது தொடர்பாக அவர் பேசியதாவது: சுப்மன் கில் உண்மையில் மிகுந்த திறமை வாய்ந்த இளம் வீரர். பேசும் போது அவர் மிகவும் அமைதியானவராக உள்ளார். ஆனால், ஆடுகளத்தில் அவர் ஆக்ரோஷமானவராக இருப்பதாக நான் உணர்கிறேன். அவர் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் கலந்த கலவையாக உள்ளார்.

தனித்துவமான ஸ்டைல்... 

விராட் கோலி ஆக்ரோஷமாக செயல்படுபவர். அவர் இந்திய அணியில் பெரிய அளவில் மாற்றத்தைக் கொண்டு வந்தார். ரோகித் சர்மா மிகவும் அமைதியாக இருப்பார். இவர்கள் இருவருக்கும் நடுவில் சுப்மன் கில் இருக்கிறார். இவர்கள் இருவரிடமிருந்தும் சுப்மன் கில் நிறைய கற்றுக்கொண்டுள்ளார். இருப்பினும், அவரது தனித்துவமான ஸ்டைலில் அணியை வழிநடத்துவார்.

பிரதமருக்கு அடுத்து... 

இந்திய அணியை கேப்டனாக வழிநடத்துவது மிகவும் கடினமான ஒன்று என நினைக்கிறேன். மிகவும் செல்வாக்கு வாய்ந்த நபர்கள் வரிசையில் பிரதமருக்கு அடுத்து மூன்றாவது அல்லது நான்காவது இடங்களில் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனே இருப்பார் என நினைக்கிறேன். இந்தியாவில் உள்ள 150 கோடி மக்களும் கிரிக்கெட் மீது அதீத ஆர்வம் கொண்டுள்ளனர். அதனால், இந்திய அணியை கேப்டனாக வழிநடத்துவது சுப்மன் கில்லுக்கு மிகவும் கடினமாக இருக்கப் போகிறது என நினைக்கிறேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து