முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாற்றுத்திறனாளிகளுக்கான நியமன கவுன்சிலர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் : தமிழக அரசு அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 1 ஜூலை 2025      தமிழகம்
TN 2024-12-2

Source: provided

சென்னை : தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன கவுன்சிலர் பதவிக்கு வரும் 17-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன கவுன்சிலர் பதவி அளிக்க அரசு உத்தரவிட்டுஉள்ளது. மாற்றுத்திறனாளிகள், தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உள்ளாட்சியில் பதவிகளை பெறும் வகையில், சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

அதன்படி, தற்போது அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளிலும், தலா ஒரு தகுதியான மாற்றுத்திறனாளி நபருக்கு, நியமன கவுன்சிலர் பதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாநகராட்சி மற்றும் நகராட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினர்களாக இணைய  விண்ணப்பிக்கலாம்.

பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்றத்திற்கு https://chennaicorporation.gov.in என்ற இணையதள முகவரியிலும், பிற மாநகராட்சி/நகராட்சி மன்றத்திற்கு https://tnurbantree.tn.gov.in/whatsnew என்ற இணையதள முகவரியிலும், பேரூராட்சி மன்றத்திற்கு https://tn.gov.in/dtp அல்லது https://dtp.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும்  17-ம் தேதி வரை விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வருகிற 17-ந்தேதி வேட்பு மனுக்களை சமர்ப்பிக்க கடைசி நாளாகும். விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்ய ஆட்சியர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து