முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆம்னி பேருந்து தீ விபத்து சம்பவம்: புதிய தகவல் வெளியாகி அதிர்ச்சி

சனிக்கிழமை, 25 அக்டோபர் 2025      இந்தியா
Acctnet

Source: provided

கர்னூல்: ஆம்னி பேருந்து தீ விபத்து சம்பவம் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

ஆந்திர பிரதேசத்தின் ஐதராபாத் நகரில் இருந்து பெங்களூரு நோக்கி ஆம்னி பேருந்து ஒன்று 44 பேருடன் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது. அப்போது, கர்னூல் நகரருகே எதிரே வந்த பைக் மீது மோதியது. இந்த விபத்தில், அந்த பைக் பேருந்துசின் கீழே இழுத்து செல்லப்பட்டதில், அதன் எரிபொருள் டேங்க் மீது மோதியுள்ளது. இதனால் அது வெடித்து உள்ளது. சம்பவம் நடந்தபோது, பயணிகள் தூங்கி கொண்டிருந்தனர். தீ விபத்தின்போது ஏற்பட்ட மின்கசிவால், பேருந்துசின் கதவுகள் பூட்டி கொண்டு திறக்க முடியாமல் போனது என கூறப்படுகிறது.

விபத்தின்போது, ஜன்னல்களை உடைத்து 20 பயணிகள் உயிர் தப்பினர். எனினும், 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில், ஆம்னி பேருந்து விபத்தில் பலர் பலியான சம்பவத்திற்காக காரணம் பற்றி அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டு உள்ளது. அந்த பேருந்துசில் 234 ஸ்மார்ட்போன்கள் இருந்துள்ளன என கூறப்படுகிறது. ரூ.46 லட்சம் மதிப்பிலான இந்த செல்போன்கள் மங்காநாத் என்ற ஐதராபாத் நகரை சேர்ந்த தொழிலதிபரால் பார்சலாக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. 

இதுபற்றி தடயஅறிவியல் நிபுணர்கள் கூறும்போது, பேருந்துசில் இருந்த பேட்டரிகள் வெடித்து, அது தீ பரவுதலில் பெரும் பங்காற்றியிருக்க கூடும் என தெரிகிறது என தெரிவித்தனர். அந்த செல்போன்கள் பெங்களூருவுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளன. இந்த வழக்கில் அலட்சியம் மற்றும் அதிவேகம் ஆகியவை ஓட்டுநருக்கு எதிரான முக்கிய குற்றச்சாட்டாக கூறப்பட்டு உள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து