முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

11 ஆண்டுகளில் இந்தியாவில் மருத்துவக்கல்லூரிகளின் எண்ணிக்கை 387-ல் இருந்து 819 ஆக அதிகரித்துள்ளது மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா பேச்சு

சனிக்கிழமை, 25 அக்டோபர் 2025      இந்தியா
JP-Natta 2023-09-12

Source: provided

புதுடெல்லி: மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 387-ல் இருந்து  819 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் 50-வது பட்டமளிப்பு விழாவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்  ஜே.பி.நட்டா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் பேசியதாவது;-

கடந்த 11 ஆண்டுகளில் நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 387 -ல் இருந்து 819 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், இளங்கலை மருத்துவ இடங்களின் எண்ணிக்கை 51,000-ல் இருந்து 1.29 லட்சமாகவும், முதுகலை இடங்களின் எண்ணிக்கை 31,000 -ல் இருந்து 78,000 ஆகவும் உயர்ந்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் கூடுதலாக 75,000 இடங்கள் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதிரி பதிவு கணக்கெடுப்பு தரவுகளின்படி, பிரசவத்தின்போது உயிரிழக்கும் தாய்மார்களின் எண்ணிக்கை விகிதம் 130-ல் இருந்து 88 ஆகவும், குழந்தை இறப்பு விகிதம்  39-ல் இருந்து 27 ஆகவும் குறைந்துள்ளது. தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்தில் நாடு கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளது.

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் மற்றும் பிறந்த குழந்தை இறப்பு விகிதம் ஆகியவை முறையே 42 சதவீதம் மற்றும் 39 சதவீதம் என்ற குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளன. இந்தியாவில் காசநோய் பாதிப்பு 17.7 சதவீதம் குறைந்துள்ளது. இது உலக சராசரியான 8.3 சதவீதத்தை விட இரண்டு மடங்கு அதிகம் என்று ‘தி லான்செட்’ அறிக்கை தெரிவித்துள்ளது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து