முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதாயத்திற்காக செயல்படாது தி.மு.க.: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

சனிக்கிழமை, 25 அக்டோபர் 2025      தமிழகம்
mrk-panneer

Source: provided

காஞ்சிபுரம்: தி.மு.க. எந்த காலத்திலும் ஆதாயத்திற்காக செயல்படாது என்றும் பல கோடி வருவாயை விட்டுவிட்டு இங்கு எதோ ஆதாயத்திற்கு விஜய் வருகிறார் என அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாநகர தி.மு.க. அலுவலக கட்டடம், கலைஞர் மார்பளவு வெண்கல சிலையை சனிக்கிழமை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவாலயத்தில் இருந்து காணொளி காட்சி வழியாக திறந்து வைத்தார். காஞ்சிபுரம் மாநகர தி.மு.க. செயலாளர் தமிழ்செல்வன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர்கள் காந்தி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மக்களை உறுப்பினர் செல்வம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எழிலரசன், சுந்தர், மேயர் மகாலஷ்மி யுவராஜ், மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளிடம் பேசிய வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம், தி.மு.க. எந்த காலத்திலும் ஆதாயத்திற்காக செயல்படாது எனவும் கரோனா காலத்தில் அனைவரையும் காத்து செயல்பட்டதை அனைவரும் அறிந்ததே. அதில் தி.மு.க. உறுப்பினர்கள் களத்தில் இறந்ததும் அனைவரும் அறிந்ததே.

பல கோடி ரூபாய் வரவை விட்டுவிட்டு இங்கு ஏதோ ஒரு ஆதாயத்திற்காக விஜய் வருகிறார் எனவும் தெரிவித்த அமைச்சர் பன்னீர்செல்வம், கரோனா காலத்தில் எந்த நடிகரும் மக்களுக்கு உதவாத நிலையில் தி.மு.க. துணிந்து செயல்பட்டது என கூறினார். மேலும், தமிழகத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் இருப்பு வைத்திருந்த நெல்களின் ஈரப்பதம் அதிகரித்து இருப்பதால், மத்திய அரசு அதனை ஆய்வு செய்து ஈரப்பதம் அதிகரிக்க நடவடிக்கை கூறியதன் அடிப்படையில் இன்று தமிழகம் வந்துள்ள இரண்டு குழுக்கள் ஆய்வு செய்து வருகிறது.

மத்திய அனுப்பியுள்ள குழு நேரடியாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு ஆய்வுக்கு சென்றதால் அவர்களை சந்திக்கும் திட்டமில்லை எனவும், பாதிக்கப்பட்ட 2555 ஹெக்டேர் விளைநிலங்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் கொள்முதல் அனைத்தும் தமிழக அரசு கவனத்துடன் மேற்கொள்ளும். அதி.மு.க. ஆட்சி காலத்தில் நெல் மூட்டைகள் அனைத்தும் நாற்றாக இருந்ததை அனைவரும் அறிந்ததே என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து