முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்டா மாவட்டங்களில் பருவமழை காரணமாக ஏற்பட்டுள்ள பயிர் சேதங்கள் குறித்து கணக்கெடுப்பு முடிந்தவுடன் நிவாரணம் வழங்கப்படும் தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சனிக்கிழமை, 25 அக்டோபர் 2025      தமிழகம்
TN-Assembly 2024-12-04

Source: provided

சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்பட்டுள்ள வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர் சேதங்கள் வேளாண் மற்றும் வருவாய் துறை அலுவலர்களால் கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது. பயிர் சேதங்கள் குறித்த கணக்கெடுப்பு முடிந்தவுடன் உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் தமிழகத்தில் வரும் நாள்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதால் நிவாரண முகாம்களை தயாராக வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக அவர் தெரிவித்தார். 

சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் அமைந்துள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா ஐஏஎஸ், பேரிடர் மேலாண் துறை ஆணையர் சாய்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

பிறகு மழை நிலவரங்கள் குறித்து அமைச்சர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் வட மாவட்டங்களில் மழை பெய்ய வாயப்புள்ளதால் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீர்வளத்துறை, வருவாய்த் துறை இணைந்து ஏரிகளின் நீர்மட்டத்தை கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறினார்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 16 ஆம் தேதியிலிருந்து துவங்கியிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. பேரிடர் வருவாய் துறை கணக்கின்படி 1.10.2025 முதல் 24.10. 2025 வரை மொத்தம் மழையின் அளவு 21.8 சதவீதம் ஆகும். இயல்பாக மழை பெய்யக் கூடிய அளவை விட சற்று கூடுதலாக உள்ளது.

புயல் தொடக்கத்தில் சென்னையை நோக்கி வருவதாக தகவல் வந்திருந்தது தற்போது ஆந்திரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அதனுடைய ஒரு பகுதியாக சென்னை சுற்றி உள்ள மாவட்டங்களில் மழை பெய்ய கூடிய வாய்ப்பு உள்ளது. முதல்வர் ஸ்டாலினும் அந்த மாவட்டத்தில் உள்ள அதிகாரிகளுக்கு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி அறிவுறுத்தி இருக்கிறார்.

அக். 25ஆம் தேதி வரை பெய்த மழைக்கு இதுவரை 31 பேர் பலியாகியுள்ளனர், 485 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. தொடர் கனமழை காரணமாக 31 பேர் உயிரிழந்த நிலையில் 23 பேர் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது - மீதம் உள்ள பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் விரைவில் வழங்கப்படும்.

வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்பட்டுள்ள வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர் சேதங்கள் வேளாண் மற்றும் வருவாய் துறை அலுவலர்களால் கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது. பயிர் சேதங்கள் குறித்த கணக்கெடுப்பு முடிந்தவுடன் உரிய நிவாரணம் வழங்கப்படும். வடகிழக்கு பருவ மழையை தமிழக முதல்வர் ஸ்டாலின் சாமர்த்தியமாகவும் கெட்டிக்காரத்தனமாகவும் கையாள்வார் என்றும் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து