முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகார் எம்.பி.யின் இரு கைகளிலும் வாக்கு செலுத்தியதற்கான மை இருந்ததால் சர்ச்சை

சனிக்கிழமை, 8 நவம்பர் 2025      இந்தியா
Vote 2024-01-05

Source: provided

பாட்னா : பீகார் எம்.பி.யின் இரு கைகளிலும் வாக்கு செலுத்தியதற்கான மை இருந்தது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.

பீகாரில் முதற்கட்ட சட்டமன்ற தேர்தல் கடந்த 6-ம் தேதி நடந்தது. அப்போது, பாஜக கூட்டணியில் இடம்பெற்ற மத்திய மந்திரி சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்த எம்.பி ஷாம்பவி சவுத்ரியின் 2 கைகளிலும் வாக்களித்ததற்கான மை இருந்தது சர்ச்சையாகியது. சமஸ்திபூர் மக்களவைத் தொகுதி எம்.பி ஷாம்பவி சவுத்ரி வாக்களித்துவிட்டு ஊடகங்களுக்கு போஸ் கொடுத்தபோது முதலில் தனது வலது கையை உயர்த்தி, மை பூசப்பட்ட விரலை வெளிப்படுத்தி, பின்னர் சிறிது நேரதில் இடது கையைக் காட்டினார். அந்த விரலிலும் மை அடையாளம் இருந்தது. இது ஷாம்பவி இரண்டு முறை வாக்களித்தாரா என்ற கேள்வியை எழுப்பியது.

இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவர் விளக்கமளித்தபோது, வாக்குச்சாவடி அதிகாரி தவறுதலாக என் வலது கையில் மை பூசிவிட்டார், தலைமை அதிகாரி, ஊழியர்களிடம் இடது கையில் பூசச் சொன்னார். அதனால்தான் என் இரண்டு விரல்களிலும் மை அடையாளங்கள் உள்ளன. பெரிய தேர்தல்களின்போது இதுபோன்ற சிறிய நடைமுறை பிழைகள் சாதாரணம், இந்தப் பிரச்னையை அரசியல் சர்ச்சையாக மாற்ற வேண்டாம் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து