முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்ஆப்பிரிக்காவில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டை அமெரிக்கா புறக்கணிக்கிறது: ட்ரம்ப் அறிவிப்பு

சனிக்கிழமை, 8 நவம்பர் 2025      உலகம்
trump 2024-12-30

Source: provided

வாஷிங்டன் : தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டை அமெரிக்கா புறக்கணிப்பதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.

ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் வருகிற 22, 23-ந்தேதிகளில் நடைபெறுகிறது. இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டை அமெரிக்கா புறக்கணிப்பதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் வெள்ளை நிற விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு துன்புறுத்தப்படுவதாக ட்ரம்ப் குற்றம் சாட்டி வரும் நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் ஜி-20 மாநாடு நடைபெறுவது முற்றிலும் அவமானகரமானது. அங்கு வெள்ளை நிற விவசாயிகளிடம் இருந்து நிலம் பறிக்கப்பட்டு தாக்குதல், கொலை செய்யப்படுகின்றனர். அங்கு சிறுபான்மையினராக உள்ள வெள்ளை ஆப்பிரிக்க விவசாயிகள் துன்புறுத்தப்படுவதற்கும் தாக்கப்படுவதற்கும் தென் ஆப்பிரிக்க அரசு அனுமதி அளிக்கிறது. இதனால் அமெரிக்காவில் இருந்து ஜி 20 உச்சி மாநாட்டில் யாரும் பங்கேற்க மாட்டார்கள்' என்று தெரிவித்தார்.

முன்னதாக ஜி-20 மாநாட்டில் பங்கேற்க மாட்டேன் என்று ட்ரம்ப் கூறியிருந்தார். தற்போது இந்த மாநாட்டை அமெரிக்கா முற்றிலும் புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளார். ட்ரம்ப்பின் இந்த குற்றச்சாட்டை தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா திட்டவட்டமாக மறுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து