முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இதய நோய், புற்றுநோய் இருந்தால் விசா ரத்து - அமெரிக்க அரசு முடிவு

சனிக்கிழமை, 8 நவம்பர் 2025      உலகம்
H-1B-Visa 2025-09-21

Source: provided

வாஷிங்டேன் : இதய நோய், புற்றுநோய் இருந்தால் வெளிநாட்டினருக்கான விசா ரத்து செய்யப்படும் என்று அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான விசா நடைமுறைகள், வெளிநாட்டவர் மீதான அடக்குமுறை ஆகியவை நாளுக்கு நாள் மோசமடைந்த வண்ணம் உள்ளன. இதில் விசா வழங்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. 

இந்நிலையில் அமெரிக்கா விசாவிற்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டினருக்கு இதய நோய், நீரிழிவு அல்லது உடல் பருமன் போன்ற உடல்நலப் பிரச்சினைகள் இருந்தால் அவர்களின் விண்ணப்பத்தை நிராகரிக்கலாம் என்று டிரம்ப் நிர்வாகம் புதிய வழிகாட்டு நெறி முறையை வெளியிட்டு உள்ளது. அமெரிக்க விசாவுக்காக விண்ணப்பிக்கும் நபருக்கு தொற்று நோய் இருக்கிறதா, என்னென்ன தடுப்பூசிகளை இதுவரை அவர்கள் செலுத்தி இருக்கிறார்கள், அவர்களின் மனநிலை ஆரோக்கியமாக இருக்கிறதா ஆகிய ஆய்வு செய்யப்படுவது வழக்கம்.

இதில் தற்போது கூடுதலாக நீரிழிவு, இதய நோய் மற்றும் உடல் பருமன் ஆகியவற்றையும் டிரம்ப் நிர்வாகம் சேர்த்துள்ளது. இந்த வழிகாட்டுதல்களை அமெரிக்க தூதரகங்கள் மற்றும் துணை தூதரகங்களுக்கு டிரம்ப் நிர்வாகம் அனுப்பி வைத்துள்ளது. அதில் விண்ணப்பதாரரின் உடல் நலன் எப்படி இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும், குறிப்பாக இதய நோய் , சுவாச நோய், புற்றுநோய், நீரிழிவு, வளர்சிதை மாற்ற நோய்கள், நரம்பியல் நோய்கள் மற்றும் மனநல நிலைமைகள் உள்ளிட்ட சில மருத்துவ நிலைமைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த நோய்கள் பராமரிப்புக்கு லட்சக்கணக்கான டாலர் தேவைப்படலாம் அந்த செலவுகளை ஏற்கக் கூடிய வகையில் விண்ணப்பதாரர் இருக்கிறாரா என்பதையும் விசா அதிகாரிகள் மதிப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் விண்ணப்பதாரரின் குழந்தைகள் அல்லது வயதான பெற்றோர் போன்ற குடும்ப உறுப்பினர்களின் உடல் நிலையை மதிப்பிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து