முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொல்கத்தா டெஸ்ட் பிட்ச் விவகாரம்: காம்பீருக்கு கவாஸ்கர் ஆதரவு

செவ்வாய்க்கிழமை, 18 நவம்பர் 2025      விளையாட்டு
18-Ram-91-A

Source: provided

மும்பை: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நடந்த கொல்கத்தா ஈடன் கார்டன் மைதான பிட்ச் குறித்து தற்போது விவாதம் எழுந்துள்ள நிலையில் பிட்ச் குறித்த தலைமை பயிற்சியாளர் காம்பீரின் கருத்துக்கு முன்னாள் வீரர் கவாஸ்கர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

3-வது நாளிலேயே...

கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் 3-வது நாளிலேயே படுதோல்வி அடைந்தது. 124 ரன் இலக்கை கூட துரத்த முடியாமல் இந்திய அணி 35 ஓவர்களில் வெறும் 93 ரன்னில் சுருண்டது. பொதுவாக இந்திய ஆடுகளங்கள் (பிட்ச்) 4-வது நாளில் இருந்துதான் சுழலுக்கு ஒத்துழைக்கும். ஆனால் இந்த ஆடுகளத்தில் தொடக்க நாளிலேயே சுழற்பந்து வீச்சின் கை ஓங்கியது. அதுவும் 2-வது நாளில் பந்து தாறுமாறாக சுழன்று திரும்பியதால் பேட்ஸ்மேன்கள் திண்டாடி போனார்கள்.

மோசமான ஆடுகளம்...

ஆனால் இத்தகைய ஆடுகளத்தை கேட்டது நாங்கள்தான். இது ஒன்றும் விளையாட முடியாத அளவுக்கு மோசமான ஆடுகளம் கிடையாது. பேட்ஸ்மேன்கள் தடுப்பாட்டத்தில் நன்றாக செயல்பட்டு இருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர் தெரிவித்து இருந்தார். ஏற்கனவே கடந்த ஆண்டு சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இதே போன்ற ஆடுகளத்தை கேட்டு வாங்கி, உதை வாங்கியது காம்பீருக்கு நினைவில்லையா?. அவர் எப்போதுதான் திருந்துவார்? என முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் அவரை விமர்சித்து வருகிறார்கள்.

சந்தேகம் இல்லை...

இந்நிலையில் காம்பீர் சொல்வது போல பிட்ச் மீது தவறில்லை என்று இந்திய முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் ஆதரவு தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “கவுதம் காம்பீர் சொல்வது முற்றிலும் உண்மை. இந்த ஆடுகளத்தில் 124 ரன்கள் துரத்தக்கூடியதாக இருந்தது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் பிட்ச் பற்றி நிறைய பேர் பேசுகிறார்கள். சைமன் ஹார்மர் வீசிய ஒரு ஓவரில் எத்தனை பந்துகள் சுழன்றன? அவர் கலவையாக வீசினார்.

சேசிங் செய்திருக்கலாம்...

ஓரிரு பந்துகள் மட்டுமே சுழன்றன. எனவே பிட்ச்சில் தாறுமாறான சுழல் இல்லை. உண்மையில் அது நீங்கள் 5வது நாள் பேட்டிங் செய்ய வேண்டிய ஒரு பிட்ச் போல இருந்தது. அங்கே நீங்கள் ஒருநாள் அல்லது டி20 போட்டி போன்று மூன்று டாட் பந்துகளுக்குப் பிறகு அடித்து ஆடியதே பிரச்சினை. இந்தியாவிடம் இருக்கும் பேட்டிங் வரிசைக்கு 124 இலக்கை 5 விக்கெட்டுகள் மீதம் வைத்து சேசிங் செய்திருக்கலாம். எனவே காம்பீர் கருத்தை நான் முற்றிலும் ஏற்கிறேன். பிட்ச்சில் தவறில்லை. 3வது நாளில் ஓரிரு பந்துகள் மட்டுமே திரும்பியது. அது இயற்கையானது” என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து