முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் நிராகரிப்பா?

செவ்வாய்க்கிழமை, 18 நவம்பர் 2025      தமிழகம்
Metro 2024-01--02

சென்னை, கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்துள்ளதாக தகவல் வெளியானது. 

சென்னையை தொடர்ந்து, மதுரை, கோவை உள்ளிட்ட நான்கு நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. கோவையில் 39 கி.மீ. தொலைவுக்கு அவிநாசி சாலையில் கருமத்தம்பட்டி வரையிலும், உக்கடத்தில் இருந்து சத்தியமங்கலம் சாலையில் வலியம்பாளையம் பிரிவு வரையிலும் உயர்மட்டப்பாதையில் மெட்ரோ ரயில் திட்டம் அமைக்கப்பட உள்ளது. 32 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது.

மதுரையில் திருமங்கலம் - ஒத்தக்கடை வரை 31.93 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த உள்ளது. 27 கி.மீ. உயர்மட்டப்பாதையில் 23 மெட்ரோ ரயில் நிலையங்களும், 4.65 கி.மீ. சுரங்கப்பாதையில் 3 மெட்ரோ ரயில் நிலையங்களும் அமைக்கப்பட உள்ளன. கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையை மத்திய, மாநில அரசிடம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்கெனவே வழங்கயது. 

இதையடுத்து, கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியது. அதன்படி, மதுரையில் ரூ.11,360 கோடியிலும், கோவையில் ரூ.10,740 கோடியிலும் மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கையை மாநில அரசு வாயிலாக, மத்திய அரசிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ரயில் திட்டத்துக்கு பல மாதங்களாக ஒப்புதல் வழங்காமல் மத்திய அரசு நாட்கள் கடத்தி வந்தது.

இதற்கிடையே, கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்துள்ளதாக தகவல் வெளியானது. மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி அளிக்க குறைந்தது 20 லட்சம் மக்கள்தொகை தேவை என்றும், கோவை மற்றும் மதுரையில் 15 லட்சம் மக்கள்தொகை மட்டுமே இருப்பதால் அனுமதி அளிக்க முடியாது எனக் கூறி, திட்ட அறிக்கைகளை மத்திய அரசு நிராகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

ஆனால் இதனை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மறுத்துள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கூறுகையில், “கோவை, மதுரை புதிய மெட்ரோ ரயில் சேவைக்கான திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தியில் உண்மையில்லை. திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அளித்துள்ளது. கூடுதல் ஆவணங்களுடன் மீண்டும் திட்ட அறிக்கையை அனுப்புமாறு தமிழக அரசிடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு கேட்டுள்ளபடி, கூடுதல் ஆவணங்களுடன் மீண்டும் விரிவான திட்ட அறிக்கை அனுப்பப்படும்.” என்று தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து