முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்களில் முன்பதிவு துவக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 4 ஜனவரி 2026      தமிழகம்
Train-2023-05-01

சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் 34 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நேற்று காலை முதல் தொடங்கியது.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-  நாகர்கோவிலில் இருந்து வருகிற 11,18 ஆகிய தேதிகளில் இரவு 11 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரயில் (வண்டி எண்.06012), மறுநாள் காலை 10.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து வருகிற 12,19 ஆகிய தேதிகளில் மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி செல்லும் சிறப்பு ரயில் (06011), மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.

 கன்னியாகுமரியில் இருந்து வருகிற 13,20 ஆகிய தேதிகளில் இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரயில் (06054), மறுநாள் காலை 10.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து வருகிற 14,21 ஆகிய தேதிகளில் மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் சிறப்பு ரயில் (06053), மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

நெல்லையில் இருந்து வருகிற 9, 16 ஆகிய தேதிகளில் அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு வரும் சிறப்பு ரயில் (06156), அதேநாள் மதியம் 1.15 மணிக்கு செங்கல்பட்டு வந்தடையும். மறுமார்க்கமாக, செங்கல்பட்டில் இருந்து வருகிற 9,16 ஆகிய தேதிகளில் மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் சிறப்பு ரயில் (06155), மறுநாள் அதிகாலை 2 மணிக்கு நெல்லை சென்றடையும்.

நெல்லையில் இருந்து வருகிற 10,17 ஆகிய தேதிகளில் அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு வரும் சிறப்பு ரயில் (06158), அதேநாள் மதியம் 1.15 மணிக்கு செங்கல்பட்டு வந்தடையும். மறுமார்க்கமாக, செங்கல்பட்டில் இருந்து வருகிற 10,17 ஆகிய தேதிகளில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் சிறப்பு ரயில் (06157), மறுநாள் அதிகாலை 3 மணிக்கு நெல்லை சென்றடையும்.

 கோவையில் இருந்து வருகிற 11,18 ஆகிய தேதிகளில் இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் சிறப்பு ரயில் (06034), மறுநாள் காலை 9.50 மணிக்கு சென்டிரல் வந்தடையும். மறுமார்க்கமாக, சென்டிரலில் இருந்து வருகிற 12,19 ஆகிய தேதிகளில் இரவு 11.25 மணிக்கு புறப்பட்டு கோவை செல்லும் சிறப்பு ரயில் (06033), மறுநாள் காலை 9 மணிக்கு கோவை சென்றடையும்.

போத்தனூரில் இருந்து வருகிற 14,21 ஆகிய தேதிகளில் நள்ளிரவு 12.35 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் சிறப்பு ரயில் (06024), அதேநாள் காலை 10.30 மணிக்கு சென்டிரல் வந்தடையும். மறுமார்க்கமாக, சென்டிரலில் இருந்து வருகிற 14,21 ஆகிய தேதிகளில் மதியம் 1.50 மணிக்கு புறப்பட்டு போத்தனூர் செல்லும் சிறப்பு ரயில் (06023), அதேநாள் இரவு 11.15 மணிக்கு போத்தனூர் சென்றடையும்.

நெல்லையில் இருந்து வருகிற 8-ந்தேதி இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும் சிறப்பு ரயில் (06070), மறுநாள் காலை 10.30 மணிக்கு எழும்பூர் வந்தடையும். மறுமார்க்கமாக, எழும்பூரில் இருந்து வருகிற 9-ந்தேதி மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் சிறப்பு ரயில் (06069), அதேநாள் இரவு 11.30 மணிக்கு நெல்லை சென்றடையும்.

ராமேசுவரத்தில் இருந்து வருகிற 13,20 ஆகிய தேதிகளில் இரவு 8.15 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரயில் (06106), மறுநாள் காலை 10.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து வருகிற 14,21 ஆகிய தேதிகளில் மதியம் 2 மணிக்கு புறப்பட்டு ராமேசுவரம் செல்லும் சிறப்பு ரயில் (06105), மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு ராமேசுவரம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே மொத்தம் 34 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. பயணிகள் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் ரயில்வே துறை முன்பதிவு இணையதளம் மற்றும் நேரடியாக ரயில் நிலைய கவுண்ட்டா்களில் முன்பதிவு செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. தைப் பொங்கலுக்கான சிறப்பு ரயில்களை தவிர்த்து வழக்கமான ரயில்களுக்கான முன்பதிவு கடந்த 2025 அக்டோபா் இறுதி வாரத்தில் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து