எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம், உண்மையில் பா.ஜ.க. யாருக்கும் நல்லது செய்யாது என்று தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மகளிர் தினத்தை முன்னிட்டு சிலிண்டர் விலையை 60 ரூபாய் உயர்த்தி மகளிருக்கு பரிசு அளித்துள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
வரவேற்கிறேன்...
மதுரை திருமங்கலத்தில் ஓ.பி.எஸ். தலைமையில் 50 ஆயிரம் பேர் தாய் கழகத்தில் இணையும் இணைப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது; இந்த மேடை மிக வித்தியாசமான மேடை. சில காலம் முன்பு வரை ஓ.பி.எஸ்., இந்த மேடையில் இருப்பார் என்று அவரே எதிர்பார்த்து இருக்கமாட்டார். ஆனால் லேட்டாக இருந்தாலும் எம்.ஜி.ஆர். இருந்த தாய் கழகமான தி.மு.க.வுக்கு திரும்பி இருக்கிறார். அவரையும், அவருடன் இணைந்தவர்களையும் தி.மு.க. தலைமை தொண்டனாக நான் வரவேற்கிறேன். எம்.ஜி.ஆருக்கு நானும் ரசிகன் தான். கழகத்தை அவர் வளர்த்தார், கழகமும் அவரை வளர்த்தது. அப்படிப்பட்ட தாய்கழகத்திற்கு நீங்கள் எல்லாரும் திரும்பி இருக்கிறீர்கள். அப்படிப்பட்ட அ.தி.மு.க. யாருக்கோ அடிமை சேவகம் செய்ய போனதால் உரிமைக்குரல் எழுப்பி தாய் கழகத்திற்கு திரும்பி உள்ளீர்கள்.
அறிவாலயத்திற்கு...
அண்ணாதுரை பெயரை தாங்கிய இயக்கம், அவரையும், அவரின் கொள்கையையும் மறந்து, அண்ணாதுரை தொடங்கிய இயக்கத்திற்கு நீங்கள் எல்லாம் வந்துள்ளீர்கள். சுயமரியாதை கோட்டையான அறிவாலயத்திற்கு வந்துள்ளீர்கள். உங்களை எல்லாம் வரவேற்கிறேன். ஓ.பி.எஸ். எப்போதுமே சிரித்த முகமாக தான் இருப்பார். அது தான்அவரின் பண்பு. ஓ.பி.எஸ்.சை பார்க்கும் போது அமைதியும், புன்னகையும் மட்டுமல்ல நினைவுக்கு வருவது விசுவாசம். ஆனால் துரோகத்திற்கு அடையாளமாக இருப்பவர் தான் இ.பி.எஸ். கூவத்தூர் சம்பவம் மூலம் முதல்வர் பதவி வாங்கிவிட்டு, அந்த பதவியை தந்த சசிகலாவையே ஒருமையில் பேசியவர் தான் இந்த இபிஎஸ்.
எதுவும் செய்வார்...
இ.பி.எஸ்.சை பொறுத்தவரையில் தன்னை காப்பாற்றிக் கொள்ள எதுவும் செய்வார். அவரின் உச்சக்கட்ட துரோகம் என்ன தெரியுமா? எம்.ஜி.ஆர். உருவாக்கிய, ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட இயக்கத்தையே இன்றைக்கு அடமானம் வைத்திருக்கிறார். பா.ஜ.க. தமக்கு நல்லது செய்யும் என்று இ.பி.எஸ். இன்றைக்கு நினைக்கிறார். உண்மையில் பா.ஜ.க. யாருக்கும் நல்லது செய்யாது. இன்றைக்கு (நேற்று) கூட சிலிண்டர் விலை 60 ரூபாய் உயர்த்தி மகளிருக்கு பரிசு அளித்துள்ளனர். 2024ம் ஆண்டு 100 ரூபாய் குறைத்தது தேர்தலுக்கான பம்மாத்து என்று பிரதமர் மோடி நிரூபித்து இருக்கிறார். இன்றைக்கு அந்த பெண் சக்தி அவரின் கண்களுக்கு தெரியவில்லையா?
உயர்த்துவோம்...
பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதாக கூறி ஒட்டுத்திருட்டு மாதிரி அவர்களின் பணத்தையும் பறிப்பது நியாயமா? 2024ல் பெண்களின் நல்வாழ்வுக்காக காண்பித்த போலி அக்கறை, 2026ல் எங்கே போனது, பா.ஜ.க.வை பொறுத்தவரை மக்களுக்கு நல்லது செய்ய விடமாட்டார்கள். இதை உணர்ந்ததால் தேர்தலை காரணம் காட்டி, மகளிர் உரிமைத்தொகை முடக்க நினைத்த சதியை முறியடித்து ஒரு கோடியே 31 லட்சம் மகளிருக்கு 5000 ரூபாய் வழங்கி இருக்கிறோம். அடுத்து வரப்போகும் ஆட்சியில் இந்த தொகையை ரூ.2000 ஆக உயர்த்துவோம் என்று அறிவித்து உள்ளோம். மக்களுக்கு எல்லாவற்றையும் தந்தால் அது தி.மு.க..
பா.ஜ.க. பந்தாடியது...
மக்களை பற்றி கவலைப்படாமல் அவர்களிடம் இருந்து எல்லாவற்றையும் பறித்தால் அது பாஜக. இப்படி யாருக்கும் நன்மை செய்யாத பா.ஜ.க.வா அ.தி.மு.க.வுக்கு நன்மை செய்ய போகிறது? அ.தி.மு.க. ரத்தத்தை தான் உறிஞ்சி எடுக்கும். அதுதான் நடக்க போகிறது. இதில் இ.பி.எஸ்.சுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் பீகாரில் என்ன நடக்கிறது என்பதை பார்க்க வேண்டும். 10 முறை முதல்வராக இருந்த நிதிஷ்குமாரை பா.ஜ.க. பந்தாடியது. இத்தனைக்கும் கடந்த நவம்பரில் தான் தேர்தல் நடந்து அவர் முதல்வர் ஆனார். அதற்குள்ளாக அவர் பதவி விலகுகிறார் என்ற செய்தி அதிர்ச்சியாக இருக்கிறது. பா.ஜ.க. சார்பில் புதிய முதல்வர் பொறுப்பேற்க இருக்கிறார் என்று ஆதாரத்துடன் தகவல்கள் வருகிறது.
தூக்கி விடுவார்கள்....
இன்றைக்கு நிதிஷ்குமாருக்கு ஏற்பட்ட கதி தான், நாளைக்கு இ.பி.எஸ்.க்கு நடக்கும். அதற்கு அவர் வெற்றி பெற வேண்டும் அல்லவா? என்று நீங்கள் நினைப்பது எனக்கு தெரிகிறது. எனக்கு கிடைத்த தகவல்படி, அதி.மு.க.வில் இ.பி.எஸ்.சுக்கு பதிலாக வேறு ஒருவரை பொதுச் செயலாளராக பா.ஜ.க. தேர்ந்து எடுத்து வைத்துள்ளது. இ.பி.எஸ்.சை இந்த தேர்தல் வரைக்கும் தான் பா.ஜ.க. வைத்திருக்கும். அதன் பிறகு அவரை தூக்கி விடுவார்கள். அதுதான் நடக்க போகிறது. ஒருவேளை பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க மறுத்திருந்தால் இப்பவே அவரை மாற்றி இருப்பார்கள். அந்தளவுக்கு அ.தி.மு.க. பா.ஜ.க. கண்ட்ரோலுக்கு போய்விட்டது.
மாற்றி விடுவார்கள்....
அ.தி.மு.க. தொண்டர்கள் ஒட்டுகளை வாங்கி தன்னை வளர்த்துக் கொள்ள பா.ஜ.க. போட்டிருக்கும் திட்டத்திற்கு இ.பி.எஸ். துணை போயிருக்கிறார். என்.டி.ஏ. சார்பில் இப்போது நடைபெறும் தேர்தல் கூட்டங்களை கவனித்தால் நன்றாக தெரியும். அ.தி.மு.க. கூட்டணி என்று சொல்ல மாட்டார்கள், என்.டி.ஏ. கூட்டணி தான் என்று சொல்வார்கள். பிரதமர் மோடியே சொல்லமாட்டார். இரண்டு விரல் காட்டும் செய்கையையும் மாற்றி விடுவார்கள். இதை எல்லாம் கவனித்தால் மஹாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு நடந்தது போல், பீகாரில் நிதிஷ்குமாருக்கு நடப்பது போல தமிழகத்தில் இ.பி.எஸ்.சுக்கு நடக்க போகிறது. இதை எல்லாம் முன் கூட்டியே கணித்த காரணத்தால் தான் அ.தி.மு.க. உண்மை தொண்டர்கள் தாய் கழகமான தி.மு.க.வுக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.
கூடுதலாக பலம்...
2021 தேர்தலில் இருந்தததை விட நாம் இப்போது கூடுதலாக பலம் பெற்றுள்ளோம். அதனால் தான் வெல்வோம் 200 என்று என்னால் தைரியமாக சொல்ல முடிகிறது. நான் உறுதியாக சொல்கிறேன், தி.மு.க. கூட்டணி 200க்கும் அதிகமான தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சி அமைப்போம். தி.மு.க. தான் வெற்றி பெறபோகிறது என்று பா.ஜ.க.வே நினைக்கிறது. அதனால் தான் நமது பிரசார பீரங்கியாக இருந்த கவர்னரை மாற்றி இருக்கிறது. ஸ்டாலினுக்கு மறுபடியும் பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டுமே என்ற விரக்தியில் அவர் கிளம்பிவிட்டார். கவர்னரை மாற்றாதீர்கள் என்று எத்தனை முறை மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தேன். இதில் கூட எங்களின் கோரிக்கையை நிறைவேற்ற மாட்டீர்களா? வெற்றிக்காக அனைவரும் ஒற்றுமையாக உழையுங்கள். இவ்வாறு பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
கடந்த 5 ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சியில் ரூ.19,694 கோடியில் ஏழை மக்களுக்காகக 4,29,394 வீடுகள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்
07 Mar 2026சென்னை, கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் தி.மு.க.
-
தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கூடுதலாக நேரச் சலுகை அறிவிப்பு: புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு
07 Mar 2026சென்னை, தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் நலன் கருதி, அவர்களுக்கு வழக்கமான தேர்வு நேரத்தை விடக் கூடுதலாக ஒரு மணி நேரம் சலுகை வழங்கப்பட்டுள்ளத
-
தூத்துக்குயில் நடந்த அரசு விழாவில் ரூ. 100 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகள்: துணை முதல்வர் உதயநிதி துவக்கி வைத்தார்
07 Mar 2026தூத்துக்குடி, தூத்துக்குயில் நடந்த அரசு விழாவில் கலந்துகொண்டு ரூ.100 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற பல்வேறு திட்டப் பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார்
-
இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: இந்தியாவில் பாசுமதி அரிசி விலை மேலும் குறைகிறது
07 Mar 2026டெல்லி, இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக இந்தியாவில் இருந்து பாசுமதி அரிசி ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விலை மேலும் குறையவுள்ளது.
-
கூட்டுறவு சங்க உதவியாளர் பணிக்கான தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை ஐகோர்ட் உத்தரவு
07 Mar 2026சென்னை, கூட்டுறவுத்துறையில் உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட நேர் முகத்தேர்வின் முடிவுகளை ஒரு வாரத்தில் வெளியிட வேண்டும் என்று கூட்டுறவு ச
-
சென்னை ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதிக்கு முதல்வர் நேரில் வாழ்த்து
07 Mar 2026சென்னை, சென்னை ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
-
நாங்குநேரி இரட்டைக்கொலையில் வன்முறையை தூண்டும் வகையில் வலைதளங்களில் பதிவிட்டதாக 11 வழக்குகள் பதிவு: 2 பேர் கைது
07 Mar 2026திருநெல்வேலி, திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக, சமூக வலைதளங்களில் வன்முறையை தூண்டும் வகையிலும், பொது அமைதி மற்றும் சமூக
-
அரசு பள்ளிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வுக்கான அரசாணை வெளியீடு
07 Mar 2026சென்னை, தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
-
சிலிண்டர் முன்பதிவுக்கு கட்டுப்பாடு: முதல்வர் மம்தா கடும் கண்டனம்
07 Mar 2026கொல்கத்தா, சிலிண்டர் விலை மற்றும் முன்பதிவுக்கு கட்டுப்பாடு மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
தி.மு.க. கூட்டணிக்கு மாற்றான ஒரு கூட்டணி உருவாகவில்லை: திருமாவளவன் கருத்து
07 Mar 2026சென்னை, தி.மு.க. கூட்டணிக்கு ஈடுகொடுக்கும் வகையில் மாற்று கூட்டணி எதுவும் உருவாகவில்லை என்று திருமாவளவன் கூறினார்.
-
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்களில் 9 பேர் பலி
07 Mar 2026கீவ், உக்ரைனின் பல்வேறு முக்கிய நகரங்களின் மீது ரஷ்யா நடத்திய தாக்குதல்களில் 9 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றிப்பெற்ற 56 பேர் அரசின் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
07 Mar 2026சென்னை, யு.பி.எஸ்.சி.
-
வீட்டில் தங்க அனுமதி வேண்டும்: விஜய் மனைவி சங்கீதா புதிய மனு
07 Mar 2026சென்னை, விஜய் வீட்டில் தங்க அனுமதி வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனைவி சங்கீதா மனு அளித்துள்ளார்.
-
ஈரானால் தாக்கப்பட்ட மத்திய கிழக்கு நாடுகளிடம் மன்னிப்பு கோரினார் அதிபர்
07 Mar 2026ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போரில், ஈரானால் தாக்கப்பட்ட மத்திய கிழக்கு நாடுகளிடம் ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் மன்னிப்பு கோரியுள்ளார்.
-
ஈரான் தலைநகரில் 80 போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் ராணுவம்..!
07 Mar 2026ஈரான், ஈரான் நாட்டின் தலைநகர் தெஹ்ரான் மீது 80 போர் விமானங்கள் மூலம் புதிய அலையாகத் தாக்குதல் நடத்தியுள்ளதாக, இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
-
மத்திய கிழக்கில் போர் எதிரொலி: பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு
07 Mar 2026லாகூர், மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போர் காரணமாக பாகிஸ்தானில் பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
-
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய்யை வாங்க இந்தியாவுக்கு அனுமதி ஏன்? அமெரிக்க நிதியமைச்சர் விளக்கம்
07 Mar 2026டெல்லி, ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கு இந்தியாவுக்கு அனுமதியளித்தோம் என்று அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.
-
கேரள மாநிலம் இடுக்கியில் தேயிலை தொழிலாளர்களுடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி..!
07 Mar 2026இடுக்கி, கேரளத்தின் இடுக்கியில் உள்ள குட்டிக்கானத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துரையாடினார்.
-
மத்திய பா.ஜ.க. அரசு மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிருக்கு பரிசாக கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி வழங்கியுள்ளது: திருமங்கலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
07 Mar 2026திருமங்கலம், உண்மையில் பா.ஜ.க.
-
பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ம் கட்ட அமா்வு நாளை தொடக்கம்: சபாநாயகருக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் மீது விவாதம்-ஓட்டெடுப்பு
07 Mar 2026புதுடெல்லி, பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ம் கட்ட அமா்வு நாளை தொடங்குகிறது.
-
மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிகள் 3 பேருக்கு சாகும் வரை சிறை
07 Mar 2026கோவை, மதுரை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.
-
மேற்குவங்க கவர்னராக நியமிக்கப்பட்ட கவர்னர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு
07 Mar 2026சென்னை, சென்னையில் மேற்குவங்க கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள தமிழக கவர்னர் ஆர்.என். ரவியை முதல்வர் மு.க.
-
வீட்டு உபயோக, வணிகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலை அதிகரிப்பு
07 Mar 2026புதுடெல்லி, நாடு முழுவதும் வீட்டு உபயோக மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடியாக சனிக்கிழமை(மார்ச் 7) உயர்த்தியுள்ளது
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
07 Mar 2026- ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு
- திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு
- காங்கேயம் முருகனுக்கு லட்சதீபம்
- திருவாரூர் தியாகராஜர் வீதி உலா
-
இன்றைய நாள் எப்படி?
07 Mar 2026


