எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,பிப்.26 - பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டபோதிலும் 2011-2011-ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கும் என்று பொருளாதார ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் பொருள்களின் விலை உயர்வு மற்றும் எகிப்து, பஹ்ரைன், லிபியா போன்ற நாடுகளில் அரசியல் குழப்பம் ஆகியவைகள் ஏற்பட்ட போதிலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2011-2012-ம் ஆண்டில் 8.6 சதவீதத்தில் இருந்து 9 சதவீதம் வரை ஏற்படும் என்று பொருளாதார ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பொருளாதார ஆய்வு அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று லோக்சபையில் தாக்கல் செய்தார். நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சியானது 8.6 சதவீதமாக உள்ளது. தனியார் சேவை, விவசாய உற்பத்தி, தொழில் துறையில் உற்பத்தி அதிகரிப்பு ஆகியவைகள் காரணமாக இந்த அளவுக்கு பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. பணவீக்கமானது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு தடையாக இருந்தது. பணவீக்கமும் ஒரு தடையாக இருந்தது. இந்த பணவீக்கம் எதிர்பார்த்ததைவிட 1.6 சதவீதம் அதிகமாக இருக்கும் என்று பொருளாதார ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்து பேசிய பிரணாப் முகர்ஜி கூறினார். உணவு பணவீக்கம் அதிகரிப்பும் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு சவாலாக வந்துள்ளது என்றும் முகர்ஜி கூறினார்.
பணவீக்கம் நடப்பு 8 சதவீதத்தில் இருந்து வரும் மார்ச் மாதத்தில் 7 சதவீதமாக குறையும் என்று பிரதமர் மன்மோகன் சிங் நேற்றுமுன்தினம் பாராளுமன்றத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |