Idhayam Matrimony

கிழக்கு தொகுதி சட்டமன்ற அலுவலகம் தமிழரசன் எம்.எல்.ஏ. திறந்துவைத்தார்

செவ்வாய்க்கிழமை, 7 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,மே.- 7 - மதுரை கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை கே.தமிரசன் எம்.எல்.ஏ. நேற்று ரிப்பன் வெட்டி திறந்துவைத்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். மதுரை மாட்டுத்தாவணி பஸ்நிலையம் எதிரே உள்ள செய்தியாளர்கள் நகரில் மதுரை கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை மதுரை கிழக்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கே.தமிழரசன் நேற்று மாலை ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார். பின்னர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அமர்ந்து கே.தமிழரசன் எம்.எல்.ஏ. தனது தொகுதி மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். இந்த மனுக்கள் மீது தகுந்த நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்வேன் என்று பொதுமக்களிடம் தமிழரசன் எம்.எல்.ஏ. உறுதி அளித்தார்.
இந்நிகழ்ச்சியில் மதுரை கிழக்கு தொகுதி கழக செயலாளர் எம்.இளங்கோவன், கிழக்கு ஒன்றிய செயலாளர் தக்கார் பாண்டி, மேற்கு ஒன்றிய செயலாளர் எம்.முருகேசன், முன்னாள் ஒன்றிய செயலாளர் கள்ளந்திரி சேகர், மாவட்ட பேரவை இணைச்செயலாளர் அய்யர் பங்களா கருப்பணன், ஆணையூர் நகரச்செயலாளர் சரவணன், வழக்கறிஞர் தி.கோபி, ஒன்றிய துணைச்செயலாளர் கருணாமூர்த்தி, இ.பி.முத்துக்காமாட்சி, எம்.எல்.ஏ.வின் உதவியாளர் சிவா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago